வி.எச்.பியிடம் நிலத்தைத் தர இன்னொரு சங்கராச்சாரியார் எதிர்ப்பு
லக்னெள:
அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் உள்ள அயோத்தி விவகார வழக்கை விரைவில் முடிக்குமாறு மத்திய அரசுகோரியுள்ளது.
இது தொடர்பாக அந்த நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், அயோத்தி விவகாரவழக்கை தினந்தோறும் விசாரித்து விரைவில் தீர்ப்பை வெளியிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இது குறித்து பதில் தாக்கல் செய்யுமாறு வழக்கில் தொடர்புடையஅமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவர்த்தன பீடம் சுவாமிகள் எதிர்ப்பு:
இந் நிலையில் அயோத்தியில் பிரச்சனைக்குள்ளாக நிலத்தை வி.எச்.பியிடம் ஒப்படைக்க கோவர்த்தனபீடத்தின்சங்கராச்சாரியார் சுவாமி அடோக்ஷாஜானந்தா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இவர் காஞ்சி சங்கராச்சாரியாரின் யோசனைக்கு தனது முழு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
விஸ்வ ஹிந்து பரிஷத்தை அவர் சமூக விரோத அமைப்பு என வர்ணித்துள்ளார். டெல்லியில் நிருபர்களிடம் அவர்கூறுகையில், சமூக விரோதிகள் கொண்ட அக் கும்பல் மதத்தை காரணமாகக் காட்டி வன்முறையைத் தூண்டிவிட்டுவருகிறது.
பா.ஜ.கவுக்கும் வி.எச்.பிக்கும் அதிக வித்தியாசம் இல்லை. காஞ்சி சுவாமிகள் மூலம் வி.எச்.பிக்கு அங்கீகாரம்தேடித் தர பா.ஜ.க. முயல்கிறது.
வி.எச்.பியிடம் ஏதாவது இடத்தைத் தந்து அவர்கள் அங்கு எதையாவது கட்டினால் நான் எனது ஆட்களுடன்சென்று இடிப்பேன்.
வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளுக்கும் மதத்துக்கும் எந்த சம்பந்தமு இல்லை. ராமரின்பெயரால் அப்பாவிகளைக் கொல்லும் கொலைக் கும்பல்கள் தான் இவை. வி.எச்.பி. தலைவர்தளைக் கைது செய்துசிறையில் தள்ள வேண்டும்.
இந்தப் பிரச்சனைக்கு நீதிமன்றம் தான் தீர்வு காண முடியும். இடைப்பட்ட காலத்தில் இரு மதத்தினரும் பேசியும்பிரச்சனையைத் தீர்க்கலாம்.
நான் முஸ்லீம் உலமாக்களுடன் பேச்சு நடத்தி வருகிறேன். வரும் 9ம் தேதி இந்தியா முழுவதும் இருந்தும்உலமாக்கள் டெல்லி வருகின்றனர். அவர்களுடன் நான் பேசுவேன்.
இந்து என்ற முறையில் ராமர் பிறந்த அயோத்தியில் கோவில் கட்ட வேண்டும் என்பதில் எனக்கு இரு வேறுகருத்துக்களே இல்லை. ஆனால், பிணங்கள் மீது கோவில் கட்ட முடியது என்றார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications