கருணாநிதி vs
சென்னை:
ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவுக்கு திமுக எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று நான்சொன்னது பச்சைப் பொய்யுமல்ல, நீலப் பொய்யுமல்ல என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவுக்கு திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுவிக்கவில்லை என்றுகருணாநிதி கூறியதற்கு, கருணாநிதி பச்சைப் பொய் சொல்கிறார் என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.
இதற்கு விளக்கம் கருணாநிதி அளித்துள்ள பதிலில்,
முறைப்படி திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று தான் நான் சொன்னேன். அதுபச்சைப் பொய்யுமல்ல, நீலப் பொய்யுமல்ல. பதவியேற்பு விழாவுக்கு எனக்கு முன்னாள் முதல்வர் என்ற முறையில்அழைப்பு வந்தது.
அதே போல் அன்பழகன், ஸ்டாலின் ஆகியோருக்கும் அழைப்பு வந்தது. ஸ்டாலினுக்கு முதல் வரிசையும்,அன்பழகனக்கு 6வது வரிசை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆற்காடு வீராச்சாமிக்கும், முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கும் அழைப்புவரவில்லை. சில திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டசபை விடுதி முகவரிக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.
சட்டசபை இல்லாத நாட்களில் அவர்களது வீட்டு முகவரிக்கு தான் அழைப்பு அனுப்ப வேண்டும். அதனால் தான்திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு முறையான அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கூறினேன்.
திமுக ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர் சோ.பாலகிருஷ்ணன் எப்படி நடத்தப்பட்டார் என்பது எல்லோருக்கும்தெரியும். ஆனால் இங்கே எதிர்கட்சித் தலைவருக்கு 6வது வரிசையில் இருக்கை என்றால், இதற்கு பெயர் தான்அரசியல் ஆரோக்கியமா?
இவ்வாறு நடந்ததை நான் சொன்னால் அது பச்சைப் பொய்யா?
காழ்ப்புணர்ச்சி, பொறாமை, பெருந்தன்மை இல்லாதவன், கீழ்த்தரமான பாணி என்றெல்லாம் சூடான சொற்களைவாரி இறைத்து விட்டு பதவியேற்பு விழாவை நான் கொச்சைப்படுத்திவிட்டேன் என்று ஜெயலலிதா கூறுவது தான்விந்தையாக இருக்கிறது.
எனது செல்வாக்கை பார்த்து எம்.ஜி.ஆர். பொறாமைப்படுகிறார் என்று ராஜீவ்காந்திக்கு கடிதம் எழுதியஜெயலலிதா, என்னைப் பார்த்து பொறாமைக்காரன் என்று சொல்வதில் எந்த அதிசயமும் இல்லை.
அன்பழகனும், ஸ்டாலினும் என்னை மீறி வந்துவிட்டதைப் போல் ஜெயலலிதா கூறியுள்ளார். இந்த திமுககுடும்பத்துக்குள் கலகம் மூட்ட ஜெயலலிதா அல்ல, வேறு யார் முயன்றாலும் முடியாது.
இனி என் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். அவர் ஆட்சியில் இருக்கிறார்.அவருக்காக பதிலளிக்க ஆள், அம்பு, ஆனை, சேனை என ஏராளமானோர் இருக்கிறார்கள் என்று கருணாநிதிகூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications