பாஜக கூட்டணியில் இருந்து திமுக விலக வேண்டும்: மார்க்சிஸ்ட்
திருப்பூர்:
உண்மையான மத நல்லிணக்கத்தை காக்க பாஜக கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும் என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை திருப்பூரில் வரதராஜன் கூறியதவாது:
குஜராத்தில் நடந்த வன்முறைக்கு பிறகும் கூட, வாஜ்பாய் அரசு மதச்சார்பின்மையை பாதுகாக்கும் என்று நம்புவதாககருணாநிதி கூறியுள்ளார். சொத்தை வாதத்தை வைத்துக் கொண்டு கருணாநிதி நழுவ முயற்சிப்பது சந்தர்ப்பவாதநிலையை காண்பிக்கிறது.
இனியாவது திமுக உண்மையான மத நல்லிணக்கத்தைக் காக்கவும், வகுப்பு மோதலை தடுக்கவும், தேசியஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்.
குஜராத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைக்கு குஜராத் அரசு உடந்தையாக உள்ளது. போலீசார்கலவரக்காரர்களை அடக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். ராணுவத்தை 2 நாள் கழித்து தான் அழைத்துள்ளனர்.
எனவே குஜராத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். அம்மாநில அரசை நீக்கவேண்டும்.
தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.தற்போது வடகிழக்குப் பருவமழை பொய்த்து விட்டதால், கோடையில் குடிநீர் பிரச்சனை மற்றும் கடும் வறட்சிநிலவ வாய்ப்புள்ளது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும் என்று வரதராஜன் கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications