அமெரிக்காவில் அதிகரித்து வரும் நம்ம ஆளுங்க
நியூயார்க்:
அமெரிக்காவில் உள்ள ஆசியர்களில் சீனர்கள், பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அடுத்தபடியாகஇந்தியர்கள் தான் மிகப் பெரும் எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் சென்சஸ் பீரோ சமீபத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தியது. இதில் இந்த விவரம்தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் மொத்தம் 1.19 கோடி பேர். இதில் 14 சதவிகிதம்,அதாவது 17 லட்சம் பேர் இந்தியர்கள். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 10ஆண்டுகளில் 8 மடங்கு அதிகரித்துள்ளது.
சீனர்கள் 20 சதவிகிதமும், பிலைப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் 16 சதவிகிதமும் வசிக்கின்றனர்.
1990ல் 3வது இடத்தில் இருந்த ஜப்பானியர்கள், 2000ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 6வது இடத்திற்குதள்ளப்பட்டுள்ளனர். 1990-2000 ஆண்டுகளுக்கு இடையே அமெரிக்காவில் வசிக்கும் ஆசியர்களின் எண்ணிக்கை50 லட்சம் அதிகரித்துள்ளது.
மேற்கு அமெரிக்காவில் 9.3 சதவிகித்தினரும், வடகிழக்கு அமெரிக்காவில் 4.4 சதவிகிதமும், தெற்குஅமெரிக்காவில் 2.3 சதவிகிதமும், மத்திய மேற்கு அமெரிக்காவில் 2.2 சதவிகிதம் ஆசியர்கள் உள்ளனர்.
அமெரிக்காவில் வசிக்கும் ஆசியர்களில் பாதி பேர் கலிபோர்னியா, நியூயார்க் மற்றும் ஹவாயில் வசிக்கின்றனர்.
கலிபோர்னியா மாகாணத்தில் தான் மக்கள் தொகையும் அதிகமாக உள்ளது. இதில் 42 லட்சம் பேர் ஆசியர்கள்.நியூயார்க்கில் 12 லட்சம் பேரும், ஹவாயில் 7 லட்சம் பேரும் ஆசியர்கள்.
அமெரிக்காவிலேயே நியூயார்க் நகரில் அதிகபட்சமாக 8.73 லட்சம் ஆசியர்கள் வசிக்கின்றனர். அடுத்தபடியாகலாஸ்ஏஞ்சல்ஸில் 4.07 லட்சமும், சான்பிரான்சிஸ்கோவில் 2.53 லட்சமும், பெர்மாண்ட் நகரில் 80,979 பேரும்வசிக்கின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications