காஞ்சி சுவாமிகளிடம் உறுதிமொழி தரவில்லை: வி.எச்.பி பல்டி
டெல்லி:
அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் பணியும் என காஞ்சி சங்கராச்சாரியார்கூறியுள்ள நிலையில், அப்படி ஏதும் உறுதிமொழி தரவில்லை என அந்த அமைப்பு பல்டி அடித்துள்ளது.
இந்த உறுதிமொழியை அடிப்படையாக வைத்துத் தான் அயோத்தியில் பிரச்சனைக்குள்ளாகாத இடத்தில் கோவில்கட்ட முஸ்லீம்களிடம் அனுமதி கேட்டார் சங்கராச்சாரியார்.
வி.எச்.பி. நீதிமன்றத் தீர்ப்பை ஏற்கத் தயாராக இருப்பதால் அருகில் கோவில் கட்டிக் கொள்ள அனுமதிப்பதாகஇஸ்லாமிய சட்ட வாரியமும் கூறியது.
இந் நிலையில் நாங்கள் நீதிமன்றத் தீர்ப்புக்கு உட்படுவதாக எந்த உறுதிமொழியும் தரவில்லை என தரவில்லை எனவி.எச்.பி. இன்று அறிவித்துள்ளது. அதன் துணைத் தலைவர் ஆச்சாரிய கிரிராஜ் கிஷோர் கூறுகையில்,
நாங்களோ, ராமஜென்ம பூமி அறக்கட்டளையோ அப்படிப்பட்ட உறுதிமொழியைத் தரவில்லை. இடிப்பட்டகட்டடம் இருந்த இடத்தில் பாபர் மசூதியைத் திரும்பக் கட்ட அனுமதிக்க மாட்டோம். ராமர் கோவில் தான்கட்டப்படும். நீதிமன்றம் முஸ்லீம்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்க முடியாது. வரலாற்றுக்கு எதிராக தீர்ப்பளிக்கமுடியாது.
15ம் தேதி நாங்கள் சொன்ன இடத்தில் திட்டமிட்டபடி கோவில் கட்டும் பணி தொடங்குவோம். 12ம் தேதிக்குள்அதற்கான அனுமதியை அரசிடம் இருந்து பெற முயல்வோம். நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்துகரசேவகர்களை வரச் சொல்லிவிட்டோம். அவர்களை தடுத்தால் தடுக்கப்பட்ட இடத்தையே அயோத்தியாக மாற்றச்சொல்லியிருக்கிறோம்.
அயோத்தியில் ராமர் கோவில் இடத்தைச் சுற்றி 12 கி.மீ. தூரத்தில் எந்த மசூதியும் கட்ட அனுமதிக்க மாட்டோம்.ஏற்கனவே அயோத்தியில் கட்டப்பட்டுள்ள மசூதிகள் ஆட்கள் இல்லாமல் காலியாகக் கிடக்கின்றன என்றார்.
அத்வானி பதவி விலக வேண்டும்:
இந் நிலையில் குஜராத்தில் கலவரத்தை வளர விட்ட மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியும், கலவரத்தைவேண்டுமென்றே தடுக்காமல் விட்ட அம்மாநில பா.ஜ.க. முதல்வரும் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூறியுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியின் இல்லத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்தது. இதன பின்னர் நிருபர்களிடம் சாட்டர்ஜி கூறுகையில், குஜராத்தில் வன்முறைதொடர்ந்து கொண்டிருப்பது பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. உள்துறை அமைச்சகமும் மாநில அரசும்சேர்ந்து தான் இந்த வன்முறையை திட்டமிட்டு வளர்த்து வருகின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மதசார்பற்ற கட்சிகள் உடனடியாக அக் கூட்டணியை விட்டு வெளியேறவேண்டும்.
எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் முன் நாளை போராட்டம் நடத்துவோம்.
அயோத்தி விவகாரத்தில் அரசியல் சாதுக்களை விட்டு பிரச்சனையை கையாள முயல்கிறது மத்திய அரசு என்றார்.
எதிர்க் கட்சிகளின் இந்த முடிவால் நாளை நாடாளுமன்றம் ஸ்தம்பிக்கும் என்று தெரிகிறது.
நாடகம் நடக்கிறது:
இந் நிலையில் குஜராத் வன்முறையில் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டதை திசை திருப்புவதற்காக அயோத்தி விவகாரத்தில் பேச்சுவார்த்தை,சமரசம் நடப்பது போன்ற ஒரு தோற்றத்தை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது என டெல்லி ஜூம்மா மசூதியின தலைவர் புகாரி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதன்மூலம் குஜராத் வன்முறையை பிரதமர் திசை திருப்பி வருகிறார். 6 மாதங்களுக்கு முன்பே வி.எச்.பியின் கோவில்கட்டும் திட்டம் குறித்து எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த மத்திய அரசு இப்போது ஏன் இந்தப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது போல நடிக்க வேணடும்?
என்னிடமும் காஞ்சி சங்கராச்சாரியார் இன்று பேசினார். பிரச்சனை தீர ஆதரவு கேட்டார். குஜராத் வன்முறையில் முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட உயிர், பொருள்இழப்புக்கு பதில் சொல்வதாக இருந்தால் நானும் ஆதரவு தருவதாகக் கூறிவிட்டேன் என்று கூறியுள்ளார்.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications