மலேசியா-சென்னை போலி விமான டிக்கெட்: டிராவல் ஏஜென்ஸ்சி அதிபர் கைது
திருச்சி:
மலேசியாவில் போலி விமான டிக்கெட் கொடுத்தது தொடர்பாக தேடப்பட்டு வந்த டிராவல் ஏஜன்சி நடத்தி வந்ததொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியை சேர்ந்தவர் கலிபுல்லா (40). இவர் காளியம்மன் கோவில் பகுதியில் டிராவல்ஸ் ஏஜன்சி வைத்து நடத்திவருகிறார். இவர் தனது தொழில் விஷயமாக மலேசியா மற்றும் பிற நாடுகளுக்கு போய் வருவார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனுரை சேர்ந்தவர் பழனியாண்டி (42). மலேசியாவில் உள்ள இவரது தம்பிஅழைத்ததின் பேரில், அங்கு செல்ல முடிவு செய்தார். இதனால் மலேசியா செல்ல டிக்கெட் வாங்குவதற்காககலிபுல்லாவிடம் ரூ.33,000 கொடுத்தார்.
கலிபுல்லாவும் மலேசியா செல்ல இருந்ததால் இவரைக் கூட்டிக் கொண்டு மலேசியா சென்றுள்ளார். ஆனால்ரிட்டர்ன் டிக்கெட்டை பழனியாண்டியிடம் கொடுத்து விட்டு கலிபுல்லா திருச்சி திரும்பி விட்டார்.
பிறகு பழனியாண்டி திருச்சி திரும்ப நினைத்து மலேசியா விமான நிலையத்திற்கு வந்த போது தான், தனது டிக்கெட்போலியானது என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அவரிடம் மலேசிய போலீசார் விசாரித்தபோது டிக்கெட்டை கலிபுல்லா கொடுத்ததை கூறயுள்ளார். பிறகு இந்தவழக்கு திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் வந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கலிபுல்லாவை காளியம்மன் கோவில்அருகே கைது செய்தனர். அவரை திருச்சி ஜூடிசியல் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை 15நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து கலிபுல்லா திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications