குஜராத் படுகொலைகள் 607 ஆனது
அகமதாபாத்:
குஜராத்தில் எரிக்கப்பட்ட வீடுகளில் இருந்து மேலும் 38 கொலையான உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால்,கடந்த ஒரு வாரமாக அங்கு நடந்து வரும் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத்தில் அயோத்தி பிரச்சனை தொடர்பாக ரயில் எரிப்பும் அதைத் தொடர்ந்து வன்முறையும் தாண்டவமாடிவருகிறது. மாநில அரசின் அலட்சியப் போக்குக் காரணாக பெரும் உயிர்ப் பலிகள் நடந்துள்ளன.
மக்கள் இன்னும் கூட்டம் கூட்டமாக, குழந்தைகளுடன் வீடுகளை விட்டு ஓடி வருகின்றனர். பக்கத்து மாநிலங்களில்குடியேறி வருகின்றனர். ராணுவம் வந்த பிறகு நிலையை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இந்தத் தாக்குதல்களைத் தடுக்க வேண்டாம் என போலீசாருக்கு மாநில பா.ஜ.க. அரசே உத்தரவிட்டுவிட்டதாககாங்கிரஸ் கூறியுள்ளது.
இந் நிலையில் எரிக்கப்பட்ட வீடுகள், மக்கள் விட்டுச் சென்ற வீடுகள், நொறுங்கிக் கிடக்கும் கட்டங்களில் இருந்துஉடல்கள் மீட்கப்பட்டவண்ணம் உள்ளன. நேற்று மட்டும் 38 உடல்கள் மீட்கப்பட்டன. அகமதாபாத்தில் மட்டும் 30எரிக்கப்பட்ட உடல்கள் மீட்கப்பட்டன.
இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை போலீஸ் கணக்குப்படி 607 ஆகியுள்ளது. ஆனால், போலீசார் பதிவு செய்யமறுத்த கொலைகள் பலநூறு உள்ளதாகத் தெரிகிறது. இதனால் குஜராத் கலவரத்தில் உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக துதேஸ்வர், ஜூகாபுரா, சர்கேஜ் ஆகிய இடங்களில் பெரிய குழிகள் தோண்டி மொத்தமாகஉடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 212 உடல்கள் இங்கு ஒட்டுமொத்தமாக குழிகளில்போட்டு மூடப்பட்டுள்ளன.
இறந்தவர்களின் உடல்களை வாங்கக் கூட உறவினர்கள் இல்லை. அவர்கள் ஊரைவிட்டுவிரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில குடும்பங்கள் மொத்தமாக எரிக்கப்பட்டுள்ளன. கைக் குழந்தைகள் கூடகொலை செய்யப்பட்டுள்ளன. இந்த உடல்களை அடக்கம் செய்யும் பணிகளை தொண்டு நிறுவனங்கள் தான்செய்து வருகின்றன.
இந்தக் கலவரத்தைத் தூண்டிவிட்ட மாநில பா.ஜ.க. அரசின் முதல்வர் நரேந்திர மோடியும், அவருக்குஉறுதுணையாக நின்ற மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியும் உடனே பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனகாங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரியுள்ளன.












Click it and Unblock the Notifications