பாசமுள்ள தம்பி, இதுவா உங்கள் ஆசை? - கருணாநிதி கடிதம்
சென்னை:
வெளியில் தான் ஜெயலலிதாவிடம் அர்ச்சனை வாங்கிக் கொண்டிருக்கிறேன். அது சட்டசபைக்குள்ளும்தொடருவதை நீங்கள் விரும்புகிறீர்களா என்று கேட்டு சபாநாயகர் காளிமுத்துவுக்கு திமுக தலைவர் கருணாநிதிகடிதம் எழுதியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி, சட்டசபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வருகிறார். அவர் சபைக்கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் காளிமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து காளிமுத்துவுக்கு கருணாநிதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். கலைஞருக்கே உரிய மொழி நடையில்செல்லும் அந்தக் கடிதத்தில் கருணாநிதி தனது ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார்.
கருணாநிதியின் கடிதம் இதோ ...
அன்புள்ள தம்பி காளிமுத்து அவர்களுக்கு, வாழ்த்துக்களுடன் வரையும் மடல்.
சட்டசபையில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். அதை சில பத்திரிக்கைகள்அழைப்பு என்றும், எச்சரிக்கை என்றும், வேண்டுகோள் என்றும் குறிப்பிட்டுள்ளன.
நான் காமராஜர், பக்தவச்சலம்,எம்.ஜி.ஆர். ஆட்சியில் எதிர்கட்சி தலைவராகவும், துணைத் தலைவராகவும்பணியாற்றி உள்ளேன். பிறகு முதல்வராக இருந்தபோதும் பலர் எதிர்கட்சி தலைவர்களாக இருந்திருக்கின்றனர்.அப்போது பல ஆக்கப்பூர்வமான விவதாங்கள் நடத்தப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு பிறகு 13 ஆண்டுகளுக்கு பிறகு நான் மீண்டும் முதல்வரானேன். அந்த ஆட்சியின் முதல் நிதிநிலை அறிக்கையை நான் படிக்க எழுந்த போது, எதிர்கட்சி தலைவியாக இருந்த ஜெயலலிதா கடுமையானவார்த்தைகளை கூறி, நீ பட்ஜெட்டை படிக்கக் கூடாது என்று தடுத்தார்.
தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் என் மீது பாய்ந்தனர். பட்ஜெட்டை பிடுங்கினர். என் கண்ணாடி உடைந்துசிதறுகிற அளவுக்கு என் முகத்தில் குத்தினர். ஒரு வேளை நீங்கள் மறந்து இருக்கலாம். இத்துடன் அந்தபோட்டோவையும் இணைத்துள்ளேன்.
எத்தனையோ விரும்பத்தகாத பேச்சுக்கள், நிகழ்ச்சிகள். அனைத்தையும் மறந்து, ஏன் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் நேரத்து நிகழ்வுகளையெல்லாம் கூட மறந்து, ஆரோக்கியமான அரசியல் நிலை நாட்டப்படவேண்டுமென்று நாட்டு நலனில் அக்கறை கொண்ட நல்லோர் தங்களைப் போலவே விரும்பியதை நிறைவேற்றவேண்டுமென்று தானே, செல்வி ஜெயலலிதா வெற்றி பெற்ற நாளில் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து என்றுசெய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினேன்.
ஆனால், அவர் அதே நாளில் எழுதி விடுத்த அறிக்கையில், கருணாநிதி என்னைக் கண்டு மனம் புழுங்குகிறார்என்றும், திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும் இனி எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு பலத்த தோல்வியைவழங்கியுள்ளோம் என்று கூறினார்.
அதற்குப் பிறகாவது நான் எழுந்திருக்க முடிகிறதா, இல்லையா என்று முயற்சி செய்து பார்க்க வேண்டாமா?
பரவாயில்லை, அதையும் பொறுத்துக் கொண்டுதான் பதவி ஏற்பு விழாவுக்கு செல்வதன் மூலம் இனியாவது தமிழகஅரசியலில் பண்பாடு காத்திட வழி காட்டுவோம் என எண்ணி எதிர்க்கட்சித் தலைவர் பேராசியர் அவ்விழாவுக்குச்சென்றார்.
ஆனால், தமிழ்நாட்டில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் ஒப்புக் கொள்ள முடியாத ஒரு நிலை, எதிர்க்கட்சித்தலைவருக்கு ஆறாவது வரிசையில் இடம்.
அது நியாயமா என்று கட்சித் தலைவனாகிய நான் கேட்டால், அரசியல் பண்பாடு பற்றிப் பேசுகிற அம்மையார்என்ன செய்திருக்க வேண்டும், தவறு நடந்திருக்கிறது, இனி இவ்வாறு நடைபெறாது, நடந்ததற்கு வருந்துகிறேன்என்று கூறாதது மட்டுமல்ல, அந்தத் தவறை சுட்டிக்காட்டிய எனக்கு எப்படித் தெரியுமா அர்ச்சனை செய்திருக்கிறார்.
பொறாமைக்காரன், புலம்புகிறவன், சிறிதும் பெருந்தன்மையில்லாதவன், கண்ணியமற்றவன், காழ்ப்புணர்ச்சிகொண்டவன்.
பேரவைத் தலைவர் அவர்களே, எனது அன்புள்ள தம்பி அவர்களே, ஒரு காலத்தில் உங்களால் அண்ணனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட எனக்கு இந்த அர்ச்சனைகள்; அவைக்கு வெளியே அம்மையாரால் ஏடுகள் வாயிலாகசெய்யப்படுவது போதாதா?
அவற்றை நான் அவைக்குள்ளே அமர்ந்தும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் ஆசைப்படுகிறீர்களா?
பதில் சொல்லுங்கள் தம்பி என்று உருக்கமாக எழுதியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications