அத்வானி பதவி விலகக் கோரி சோனியா போராட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

குஜராத் வன்முறைக்கு உள்துறை அமைச்சர் அத்வானி தான் முக்கியக் காரணம் என்று கூறி காங்கிரஸ் தலைவர்சோனிய காந்தி தலைமையில் எதிர்க் கட்சிகள் இன்று நாடாளுமன்ற வாயிலில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

குஜராத்தில் ஏற்பட்ட வன்முறையை போலீசார் கட்டுப்படுத்தவேயில்லை. கிட்டத்தட்ட 300 பேர் பலியான பின்னர்தான் ராணுவத்தையே மாநில அரசு கேட்டது. மத்திய உள்துறை அமைச்சகமும் மாநில பா.ஜ.க. அரசும் சேர்ந்து தான்முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதாக அனைத்து எதிர்க் கட்சிகளும் குற்றம்சாட்டியுள்ளன.

கரசேவகர்கள் சென்ற ரயிலுக்குத் தீவைக்கப்பட்டதையடுத்தும், உத்தரப் பிரதேசத்தில் தோல்விஏற்பட்டதையடுத்தும் முஸ்லீம்கள் மீது தாக்குதலை பா.ஜ.க. தூண்டிவிட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகுற்றம் சாட்டியுள்ளது.

குஜராத் வன்முறையில் அத்வானிக்கும், மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கும் நேரடித் தொடர்பிருப்பதாகமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கூறியுள்ளார்.

இந் நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடியது. ஆனால், எதிர்க் கட்சி எம்.பிக்கள் சுமார் 200 பேர் அவைக்குள்செல்லாமல் முக்கிய வாயிலேயே தர்ணா போராட்டத்தில் இறங்கினர். அத்வானியும் மோடியும் ராஜினாமா செய்யவேண்டும். இல்லாவிட்டால் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரினர்.

இந்தப் போராட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை.

லோக் சபாவில் அமளி:

இதையடுத்து அவர்கள் நாடாளுமன்றத்துக்குள் சென்றனர்.

லோக்சபாவில் உத்தரப் பிரதேச விவகாரம் வெடித்தது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி அதிக இடங்களில்வென்றிருந்தபோதிலும் அக் கட்சியை ஆட்சியமைக்க அழைக்காமல் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தபா.ஜ.க. முயன்று வருகிறது.

மாநில ஆளுநரின் உதவியுடன் பா.ஜ.க. இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி சமாஜ்வாடிக் கட்சி மற்றும்ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தின் மையத்தில் கூடி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

குஜராத் வன்முறைக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். உத்தரபி பிரதேசத்தில் கவர்னர்மாளிகையிலேயே சமாஜ்வாடிக் கட்சி எம்.எல்.ஏ. சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும் கோஷம் எழுப்பினர்.அவர்களை அமைதிப்படுத்த துணை சபாநாயகர் சயீத் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்துலோக் சபா ஒத்தி வைக்கப்பட்டது.

ராஜ்யசபாவும் ஒத்திவைப்பு:

இதே போல ராஜ்யசபாவிலும் எதிர்க் கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை எதிர்த்து பா.ஜ.க.உறுப்பினர்களும் பதில் கோஷம் எழுப்பினர். அவர்களை அமைதியாக இருக்குமாறு வாஜ்பாய் சைகை மூலம்கூறினார். இதையடுத்து அவர்கள் அமைதியாயினர்.

ஆனால், எதிர்க் கட்சியினரின் போராட்டம் தொடர்ந்ததால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+