ராஜ்யசபா எம்.பி. தேர்தல்: ஒரு சுயேச்சை மனுத்தாக்கல்
சென்னை:
தமிழகத்திலிருந்து காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் குறித்த அறிவிப்புஇன்று வெளியிடப்பட்டது. இன்றே வேட்பு மனுத்தாக்கலும் தொடங்கியது.
முதன்முதாக பத்மராஜன் என்ற சுயேச்சை வேட்பாளர் தனது மனுவைத் தாக்கல் செய்தார்.
இதுதொடர்பான அறிவிப்பை தமிழக சட்டப் பேரவை செயலாளர் ராஜாராமன் வியாழக்கிழமை காலை வெளியிட்டார். வரும் 14ம் தேதிவரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். தினசரி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல்செய்யலாம்.
15ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 18ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளளாம். போட்டிஇருந்தால் 27ம் தேதி தேர்தல் நடக்கும். வாக்குப் பதிவு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்று அவர் தனதுஅறிவிப்பில் கூறியுள்ளார்.
அதிமுக சார்பில் எம்.பிக்களாக இருக்கும் தளவாய் சுந்தரம், நிறைகுளத்தான், செளந்தராஜன் ஆகியோர் பதவிஇழக்கின்றனர்.
திமுக சார்பில் எம்.பிக்களாக உள்ள சிவா, சுப்பையன் ஆகியோரின் பதவிக் காலம் முடிவடைகிறது.
த.மா.கா. சார்பில் எம்.பியாக உள்ள பீட்டர் அல்போன்சின் பதவிக் காலமும் முடிவடைகிறது.
இப்போதுள்ள எம்.எல்.ஏக்கள் பலப்படி அதிமுகவுக்கு 4 எம்.பிக்களும், திமுகவுக்கும் ஒரு எம்.பியும் கிடைப்பர்.
த.மா.காவுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆதரவுடன் ஒரு இடம் கிடைக்கும். இந்த இடத்தில் தான் அக் கட்சியின்தலைவர் வாசன் போட்டியிடுகிறார்.
அதிமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.
திமுகவில் இன்னும் இது பற்றி பேச்சு மூச்சே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications