இப்படியும் சில ஜென்மங்கள் !
ஜெய்ப்பூர்:
குஜராத்தில் நடந்த பயங்கர வன்முறை ராஜஸ்தானுக்கும் பரவுமா என்பது தொடர்பாக "பெட்" கட்டி சூதாடிய 81பேரை ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்தனர்.
சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலோடு 58 கர சேவகர்கள் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் ஏற்பட்ட பயங்கரவன்முறையில் இதுவரை 607 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையே ராஜஸ்தானில் பல பேர் இந்த வன்முறைச் சம்பவங்களை வைத்து சூதாட ஆரம்பித்தனர். குஜராத்தில்நடந்த வன்முறை ராஜஸ்தானிலும் பரவுமா இல்லையா என்று அவர்கள் சூதாடினர்.
செல்போன் மற்றும் தொலைபேசி மூலமாக சர்வ சாதாரணமாக இவர்கள் தங்கள் சூதாட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர். இதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாயும் பரிமாறப்பட்டன.
ராஜஸ்தானிலும் வன்முறை பரவி விட்டதாக வந்த புரளிகளையடுத்து, போலீசார் தங்கள் நடவடிக்கைகளைத்தீவிரப்படுத்தினர். அப்போது தற்செயலாக இதைக் கண்டுபிடித்த போலீசார், ஜெய்ப்பூரில் உள்ள 11 போலீஸ்நிலையங்கள் மூலம் சூதாட்டக்காரர்களின் பேச்சுக்களைக் கண்காணித்தபோது அதிர்ந்தே போய்விட்டனர்.
இதையடுத்து கடந்த 3 நாட்களாக நடந்த வேட்டையில் 81 சூதாட்டக்காரர்களைப் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 24 செல் போன்களும், பல தொலைபேசி சாதனங்களும், ரூ.75,000 ரொக்கப் பணமும் மற்றும்"பெட்" கட்டுவதற்காகப் பயன்படுத்தப்படம் சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட 81 பேரில் 49 பேர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மற்ற அனைவரும் ஜாமீனில்விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தச் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த மேலும் பலரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications