குஜராத்தில் சோனியா, வைகோ
அகமதாபாத்:
குஜராத் வன்முறை, மதக் கலவரக் கொலைகள் குறித்து நேரில் பார்வையிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதலைமையிலான 27 எம்.பிக்கள் கொண்ட அனைத்துக் கட்சிக் குழு இன்று அகமதாபாத் வந்தது.
இதில் மதிமுக தலைவர் வைகோ, மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
சிறப்பு விமானத்தில் வந்த அவர்கள் முதலில் அயோத்தி கர சேவகர்கள் சென்ற ரயில் எரிக்கப்பட்ட கோத்ராவுக்குப்புறப்பட்டுச் சென்றனர்.
இவர்கள் அகமதாபாத்தில் வன்முறை நடந்த இடங்களைப் பார்வையிட்ட பின்னர் முதல்வர் நரேந்திர மோடியையும்சந்தித்துப் பேசுவர்.
அயோத்தியில் கட்டுப்பாடுகள் தளர்வு:
அயோத்தியில் கோவில் கட்டுவது தொடர்பான விவகாரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் இறங்கி வந்ததையடுத்துஅங்கு போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இந் நகரில் குவிந்துள்ள கர சேவகர்கள் அனைவரும் வி.எச்.பியின் முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தனர். யாரும்வெளியே வரக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது.
அயோத்தியில் பிரச்சனைக்குரிய இடம் இடத்துக்கு அருகே சென்று வர பாஸ் வழங்கப்பட்டிருந்தது. இதைவைத்திருப்பவர்கள் மட்டுமே முகாமை விட்டு வெளியே வரவே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
கோவில் கட்ட நிலம் தர ஒப்புக் கொள்ளாவிட்டால் 15ம் தேதி வலுக்கட்டாயமாக கோவில் கட்டும் பணியைத்தொடங்குவோம் என்று கூறியிருந்த வி.எச்.பி., சங்கராச்சாரியாரின் தலையீட்டின்பேரில் தனது நிலையை மாற்றிக்கொண்டுவிட்டது.
நிலம் தந்தால் உடனடியாக அங்கு எந்தக் கட்டுமானப் பணியையும் தொடங்க மாட்டோம், வெறும் பூமி பூஜைமட்டும் தான் நடத்துவோம் என வி.எச்.பி. இப்போது அறிவித்துள்ளது.
இதையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications