நாகர்கோவிலில் வெடிகுண்டு வீச்சு: 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே 10 ரூபாய்க்கு வெடிகுண்டு வாங்கி வீடு மீது வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் அருகே உள்ளது தெங்கம்புதூர். இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு வீடு மீது திடீரென வெடிகுண்டு வந்துவிழுந்து வெடித்தது.
ஆனால் நல்லவேளையாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் தெரிவிக்கையில், அந்தவெடிகுண்டை பத்து ரூபாய் கொடுத்து ஒருவரிடமிருந்து வாங்கியதாகக் கூறினர்.
இதையடுத்து வெடிகுண்டு விற்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக வெடிகுண்டு வீசப்பட்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications