இலங்கை ராணுவ கிடங்கில் பயங்கர தீ
கொழும்பு:
இலங்கையில் உள்ள ராணுவக் கிடங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பயங்கரமான தீ விபத்துஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த வெடி பொருட்கள் வெடித்துச் சிதறின.
இதையடுத்து 2 மாடிகள் கொண்ட அந்தக் கிடங்கில் இருந்த கண்ணி வெடிகள் உள்ளிட்ட ஏராளமானவெடிபொருட்கள் பயங்கரமான சத்தத்துடன் வெடிக்க ஆரம்பித்தன.
இதனால் தீ மேலும் பரவியதால், அதை அணைப்பதற்குப் பல மணி நேரங்கள் பிடித்தன. இதற்கிடையேவெடிபொருட்கள் வெடிக்க ஆரம்பித்ததால் அஞ்சிய காங்கேசன்துறையைச் சேர்ந்த மக்கள், உடனடியாகத் தங்கள்இருப்பிடங்களை விட்டு வெளியேறினர்.
ஆனாலும் இந்தத் தீ விபத்து காரணமாக உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ராணுவ வட்டாரங்கள்தெரிவித்தன.
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நிரந்தரப் போர்நிறுத்தம் சமீபத்தில்தான் அமலுக்குவந்துள்ள நிலையில் இவ்விபத்து ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்துக்கு நாசவேலைதான் காரணமா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications