காங்கிரஸ் எனக்கு நிபந்தனை விதிக்கவில்லை - வாசன்
சென்னை:
நடைபெறவுள்ள ராஜ்ய சபா தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் கட்சி எந்தவிதமான முன்நிபந்தனையும் விதிக்கவில்லை என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் இன்று (வெள்ளிக்கிழமை) கூறினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் மற்றும்இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஏ. ராஜா ஆகியோரை டெல்லியில் சந்தித்துப் பேசிய வாசன் இன்று சென்னைதிரும்பிய பின் நிருபர்களிடம் கூறியதாவது:
வரவிருக்கும் ராஜ்ய சபா தேர்தலில் தமாகாவை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆதரிக்கவேண்டும் என்று கோருவதற்காகவே டெல்லி சென்றிருந்தேன்.
தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் பற்றி சோனியாவிடம் தெளிவாக எடுத்துக் கூறி, ராஜ்ய சபா தேர்தலில்தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தமாகாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தேன்.
ஆனால் இதற்காக காங்கிரஸ் எந்தவிதமான முன் நிபந்தனையையும் விதிக்கவில்லை.
அயோத்தி விவகாரத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் வெற்றி பெறவேண்டும் என்றார் வாசன்.
காங்கிரசுடன் தமாகா இணையுமா என்ற கேள்விக்குப் பதிலளிக்க வாசன் மறுத்து விட்டார்.
இதற்கிடையே ராஜ்ய சபா தேர்தலுக்கு தமாகா சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக,அக்கட்சியின் அரசியல் விவகாரக் குழுவின் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக அக்கட்சியின்செய்தித் தொடர்பாளர் பி.எஸ். ஞானதேசிகன் கூறினார்.
வாசன்தான் வேட்பாளர் என்று தெரிவித்த தமாகா கட்சி வட்டாரங்கள், முறைப்படி அது ஞாயிற்றுக்கிழமைஅறிவிக்கப்படும் என்று கூறின.












Click it and Unblock the Notifications