போக்குவரத்துக் கழகங்கள் தனியார்மாக்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்தும் படிப்படியாக தனியார்மயமாக்கப்படும் என அரசு ஆளுநர்உரையில் அறிவித்துள்ளது.
தமிழ சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு ஆரம்பமானது.முன்னதாக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும்சட்டசபைக்கு வந்தனர்.
சரியாக 11 மணிக்கு மெய்க்காப்பாளர் புடை சூழ சட்டசபைக்கு வந்தார் ஆளுநர் ராமமோகன்ராவ். பிறகு அவர்தமிழக அரசு எடுத்துள்ள முடிவுகளை படிக்க தொடங்கினார். அவர் பேசுவதற்கு முன்பே திமுகவினர் வெளிநடப்புசெய்வதாக அறிவித்துவிட்டு, கருணாநிதி உட்பட அனைத்து திமுக எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநர் தனது உரையில் கூறியிருப்பதாவது:
டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தை தீவிரவாதிகள் தாக்கியது, நாட்டின் இறையாண்மையை தாக்கியதுபோன்றதாகும். இந்த தாக்குதலில் பலியான பாதுகாவலர்களின் குடும்பத்திற்கு தமிழக மக்களின் சார்பில் ஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
குஜராத்தில் மதக்கலவரத்திற்கு காரணமானவர்களை, தமிழக அரசு வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்தில் மதநல்லிணக்கத்தை காப்பாற்றவும், அமைதிக்கும் தமிழக மக்கள் தமிழக அரசுக்கு தங்கள் முழுஆதரவை அளிக்க வேண்டும்.
தமிழக அரசு, சட்டம், ஒழுங்கை காப்பாற்றுவதற்கு தொடர்ந்து முதல் இடம் கொடுக்கும்.
மாநிலத்தில் பொருளாதார சீர்திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசுடன் தமிழகம் ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும். இதன் மூலம் பொருளாதார சீர்திருத்தத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியிலிருந்துதமிழகத்துக்கு உதவி கிடைக்கும்.
பொருளாதார சீர்திருத்தங்கள் வெற்றி பெற வேண்டுமானால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு போதிய நிதியுதவிஅளிக்க வேண்டும். தனது வருவாயை பங்கிட்டு மாநிலங்களுக்கு அரசு தர வேண்டும்.
போக்குவரத்து கழகங்கள் படிப்படியாக தனியார் மயமாக்கப்படும். நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள்மூடப்படும் என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.
ஆளுநர் உரை என்பது சட்டமன்றத்தில் மாநில அரசின் திட்டங்கள் அறிவிக்கப்படும் உரையாகும்.
உரையைப் படிப்பது ஆளுநர் என்றாலும் அதைத் தயாரித்துத் தருவது மாநில அரசு தான்.












Click it and Unblock the Notifications