கருணாநிதி பயப்படாமல் சட்டசபைக்கு வரலாம்: ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வராக நான் அமர்ந்திருப்பதை காண சகிக்காத கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் திமுகஎம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்திருப்பதாக ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. சட்டசபைக்கே வராமல் இருந்த திமுக தலைவர்கருணாநிதி சட்டசபைக்கு வந்தார்.

கவர்னர் தனது உரையை ஆரம்பிக்கும் முன்னரே தாங்கள் வெளிநடப்பு செய்யப் போவதாக அன்பழகன்அறிவித்து விட்டு, திமுகவினர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

ஆளுநர் உரையை முடித்த பிறகு வெளியே வந்த முதல்வர் ஜெயலலிதா நிருபர்களிடம் கூறியதாவது:

ஆளுநர் உரையை படிக்கும் போது யாரும் குறுக்கே பேசக்கூடாது என்பது சட்டசபை விதி. இது தெரிந்திருந்தும்அன்பழகன் ஒரு அறிக்கையை படித்து விட்டு தனது உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தது சட்டமன்றவிதிகளுக்கு விரோதமானது.

கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் தான் திமுகவினர் வெளிநடப்பு செய்திருப்பார்கள். நான் முதல்வராகஅமர்ந்திருப்பதை காண சகிக்காத கருணாநிதி இவ்வாறு செய்துள்ளார்.

தொடர்ந்து 3 கூட்டத் தொடர்களுக்கு கருணாநிதி வரவில்லை என்றால் அவரது பதவி பறி போகிவிடும் என்றுசபாநாயகர் கூறியிருந்தார். அதனால் தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காகவே கருணாநிதி இன்றுசட்டசபைக்கு வந்துள்ளார்.

கருணாநிதி தொடர்ந்து சட்டசபைக்கு எந்த பயமும் இல்லாமல் வரலாம். அவரை யாரும் எதுவும் செய்யமாட்டார்கள். அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்.

போக்குவரத்துத்துறை தனியார் மயமாக்கப்படுவது, முதலில் நீலகிரி மாவட்டத்திலிருந்து தொடங்கும் என்றுஜெயலலிதா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+