பெண் போலீசின் கள்ளக் காதலால் கணவர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தனது கள்ளக் காதலால் கணவர் இறப்பதற்குக் காரணமாக இருந்த பெண் போலீஸ் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரத்தில் ஆயுதப்படை பிரிவில் காவலராக இருப்பவர் ஜெயந்தி. இவரது கணவர் வீரராகவன். இருவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்குமுன்பு திருமணம் நடந்தது ஒரு குழந்தை உள்ளது. சென்னை வளரசவாக்கம் பகுதியில் குடியிருந்தனர்.

இந் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வீரராகவன் பூச்சி மருந்து குடித்தார். மயங்கிய நிலையில் அவர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

வீரராகவனின் டைரியைப் போலீஸார் பார்த்தபோது, அதில் தனது மனைவி ஜெயந்திக்கும், அவரது அக்காள் கணவருக்கும் இடையேகள்ளத் தொடர்பு இருப்பதாகவும், இதனால் மனம் உடைந்துபோய் இருப்பதாகவும் எழுதியிருந்தார்.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாகவே வீரராகவன் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்தனர். இதையடுத்துஜெயந்தியிடம் விசாரணை நடத்தியபோது, தனக்கும், அக்காள் கணவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததை ஒத்துக் கொண்டார்.

இதையடுத்து கணவரின் தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக ஜெயந்தியை போலீஸார் கைது செய்தனர். ஜெயந்தியின் அக்காள் கணவர்அசோக்குமாரும் கைது செய்யப்பட்டார். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+