காஞ்சி சுவாமிகளின் திட்டத்தை ஏற்க முஸ்லீம் சட்ட வாரியம் மறுப்பு
டெல்லி:
அயோத்தியில் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட இடத்தில் வரும் 15ம் தேதி பூமி பூஜை நடத்தி ராமர் கோவில் கட்டப்படும்என்று காஞ்சிபுரம் மடத்தின் ஜெயேந்திர சுவாமிகள் அறிவித்துள்ள திட்டத்தை முஸ்லீம் சட்ட வாரியம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மறுத்துள்ளது.
ராமர் கோவில் பிரச்சனை தொடர்பாக கடந்த வாரம் 4 நாட்கள் டெல்லியில் முகாமிட்டு விஸ்வ ஹிந்து பரிஷத்(வி.எச்.பி.) மற்றும் முஸ்லீம் அமைப்பினருடன் ஜெயேந்திர சுவாமிகள் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் கடந்த வெள்ளியன்று சென்னை திரும்பிய ஜெயேந்திர சுவாமிகள், சர்ச்சைக்கு அப்பாற்பட்ட இடத்தில்வரும் 15ம் தேதி பூமி பூஜை நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் முஸ்லீம் சட்ட வாரியத்தின் முக்கியக் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. காஞ்சி சுவாமிகளின்இந்தத் திட்டத்தை மறுப்பதென இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கடந்த 1989ல் வி.எச்.பி. எடுத்துள்ள முடிவுக்கும் தற்போது காஞ்சி சுவாமிகள் எடுத்துள்ள முடிவுக்கும் வித்தியாசம்எதுவும் இல்லை. எனவே அவருடைய முடிவை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று முஸ்லீம் சட்ட வாரியம்தெரிவித்துள்ளது.
பாபர் மசூதி இருந்த இடத்தை விற்கவோ, அன்பளிப்பாகவோ கொடுக்க நாங்கள் எந்தவிதத்திலும் தயாராகஇல்லை. இது தொடர்பாகப் பேரம் பேசவும் நாங்கள் தயாராக இல்லை என்று பாபர் மசூதி இயக்கக் குழுவின்ஒருங்கிணைப்பாளர் சையது சகாபுதீன் கூறினார்.
இருப்பினும் இது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார் என்றும் சகாபுதீன் கூறினார்.
பூமி பூஜை கட்டாயம் நடக்கும்: வி.எச்.பி.
இதற்கிடையே எவ்வளவு தடைகள் வந்தாலும் வரும் 15ம் தேதி பூமி பூஜை நடந்தே தீரும் என்று வி.எச்.பியின்பொதுச் செயலாளர் பிரவீண் தொகாடியா கூறியுள்ளார்.
இந்த பூஜை விவகாரத்தில் தலையிடவும் இந்துக்களின் உரிமைகளைப் பறிக்கவும் யாருக்கும் எந்தவிதமானஉரிமையும் கிடையாது என்றும் தொகாடியா கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications