சென்னையில் ரயிலுக்கு தீ வைப்போம்: அல்-உம்மா மிரட்டல்
சென்னை:
அல்-உம்மா தலைவர் பாஷாவை விடுவிக்காவிட்டால், குஜராத் சம்பவம் போன்று சென்னையிலும் ரயிலுக்கு தீவைத்து எரிப்போம் என்று அல்-உம்மா தீவிரவாதிகள் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர்.
கடந்த மாதம் 27ம் தேதி குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையம் அருகே கரசேவகர்கள் வந்த ரயிலுக்கு சிலர் தீவைத்தனர். இந்த சம்பவத்தில் 58 பேர் உயிருடன் எரிந்து சாம்பலாயினர். இதையடுத்து குஜராத்தில் சில நாட்கள்ஏற்பட்ட கலவரத்தில் 600 பேருக்கும் மேல் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் சென்னை மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு சனிக்கிழமை ஒரு மர்ம கடிதம் வந்தது. அந்தக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அல்-உம்மா இயக்கத் தலைவர்கள் பாஷா, மதானி ஆகியோரை உடனே தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை உடனே நிறுத்த வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் குஜராத் மாநிலத்தில் நடந்தது போல் சென்னையில் மாம்பலம்வழியாக செல்லும் ரயிலை வழிமறித்து தீ வைத்து எரிப்போம்.
இதற்கு நீங்கள் என்ன பாதுகாப்பு போட்டாலும் எங்கள் திட்டப்படி ரயிலை எரிப்போம். அதன் பிறகு அல்-உம்மாஅமைப்பு அதற்கு பொறுப்பாக முடியாது. இப்படிக்கு, அல்-உம்மா என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து ஸ்டேஷன் மாஸ்டர் ரயில்வே போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து சென்னையில் உள்ளஅனைத்து ரயில் நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications