இமாம் அலியை தேடி நாகர்கோவில்-மும்பை ரயிலில் போலீசார் அதிரடி சோதனை
திண்டுக்கல்:
கடந்த வாரம் மதுரை அருகே தப்பிய அல்-உம்மா கைதிகளில் ஒருவனான இமாம் அலி, நாகர்கோவில்-மும்பைஎக்ஸ்பிரஸ் ரயிலில் தப்பிச் செல்வதாக வந்த தகவலையடுத்து இன்று (திங்கள்கிழமை) திண்டுக்கல் ரயில்நிலையத்திற்கு வந்த அந்த ரயிலில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் ஹைதர்அலி மற்றும் இமாம் அலி ஆகிய அல்-உம்மா கைதிகளை சில நபர்கள் வந்து கடத்திச் சென்றனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை சிவகங்கையில் ஹைதர் அலி மட்டும் போலீசாரிடம் பிடிபட்டான்.
ஆனால் இன்னும் சிக்காமல் இருக்கும் இமாம் அலியைத் தேடும் பணியில் தமிழக போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். மதுரையில் பொது இடங்களில் எல்லாம் இமாம் அலியின் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் இமாம் அலி மும்பைக்குத் தப்பிச் செல்லத்திட்டமிட்டிருப்பதாகப் போலீசாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து இன்று நண்பகல் திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்த நாகர்கோவில்-மும்பை ரயிலில்போலீசார் திடீரெனப் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த ரயிலில் ஒவ்வொரு பெட்டியாகச் சோதனை மேற்கொண்டபோதிலும், அதில் இமாம் அலி வரவில்லை என்றுஅறிந்ததும் போலீசார் ஏமாந்தனர்.
போலீசார் நடத்திய இந்தத் திடீர்ச் சோதனையால் திண்டுக்கல் ரயில் நிலையம் பெரும் பரபரப்புக்குள்ளானது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications