பாலயோகிக்கு இரங்கல்: தமிழக சட்டசபை ஒத்திவைப்பு
சென்னை:
கடந்த வாரம் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த மக்களவை சபாநாயகர் பாலயோகியின் மறைவுக்கு இரங்கல்தெரிவித்த பின்னர் தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் இன்று (திங்கள்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த சனிக்கிழமை (மார்ச் 11) தொடங்கியது. அன்று ஆளுநர்ராமமோகன் ராவ் உரை நிகழ்த்திய பிறகு சபை ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பிறகு இன்று மீண்டும் சட்டசபை மீண்டும் கூடியது. கடந்த 3ம் தேதி ஆந்திராவில் ஒரு ஹெலிகாப்டர்விபத்தில் பலியான பாலயோகிக்கு இன்றைய கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா, சபாநாயகர் காளிமுத்து, எதிர்க் கட்சித் தலைவர் அன்பழகன் உள்பட அனைத்துக் கட்சித்தலைவர்களும் பாலயோகியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல் சமீபத்தில் இறந்த வாணியம்பாடி எம்.எல்.ஏவான அப்துல் லத்தீப் மற்றும் அச்சரப்பாக்கம்எம்.எல்.ஏவான செல்வராஜ் ஆகியோருக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்திலும் அக்டோபர் 1ம் தேதி காஷ்மீர் சட்டசபையிலும்தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை தமிழக சட்டசபை உறுப்பினர்கள் கண்டித்தனர்.
இந்திய மண்ணில் எந்த வடிவில் தீவிரவாதம் தோன்றினாலும் அது ஒழிக்கப்பட வேண்டும் என்று கோரும்தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர் இன்றைய அலுவல்கள் ஏதும் நடைபெறாமலேயே தமிழக சட்டசபைஒத்திவைக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications