பெரியகுளம்: பஸ்-ஆட்டோ மோதலில் 4 பேர் பலி
தேனி:
பெரியகுளம் அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டோ மீது ஒரு தனியார் பஸ் மோதியதில் ஆட்டோ டிரைவர்உள்பட அதில் பயணம் செய்த 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
நேற்றிரவு 4 இளைஞர்கள் (நால்வருக்கும் சுமார் 25 வயதுதான்) ஆட்டோ மூலம் தேனியில் உள்ள ஒருதியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்று கொண்டிருந்தனர்.
எதிர்த் திசையில் தேனியிலிருந்து சென்னை நோக்கி ஒரு தனியார் பஸ் படுவேகத்துடன் வந்து கொண்டிருந்தது.
கைலாசப்பட்டி அருகே சென்று கொண்டிருக்கும்போது, அந்த ஆட்டோவுடன் பஸ் பயங்கரமாக மோதியது. இதில்ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கி விட்டது.
இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 4 இளைஞர்களும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர்.
மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாளை. அருகே பஸ்-லாரி மோதி 6 பேர் சாவு:
இதற்கிடையே பாளையங்கோட்டை அருகே பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 6 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
பாளையங்கோட்டையை அடுத்த மூன்றடைப்பு அருகே லாரியுடன் மோதிய வேகத்தில், அந்த பஸ் அருகிலுள்ளபள்ளத்தில் கவிழ்ந்தது.
பஸ் கவிழ்ந்ததால் அதற்குக் கீழே சிக்கி 2 பேரும், பஸ்சிலிருந்து அவசர அவசரமாகப் பயணிகள்வெளியேறியபோது மிதிபட்டே 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
லாரி டிரைவரும் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் ஒரு வயதான பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபின் உயிரிழந்தார்.
இவ்விபத்தில் காயமடைந்த 42 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications