ஒரே நேரத்தில் கோவில், மசூதியை கட்டக் கோரி வழக்கு
டெல்லி:
அயோத்தியில் கோவிலையும் மசூதியையும் ஒரே நேரத்தில் கட்ட உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில்இன்னொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால்,கோவிலை சர்ச்சைக்குரிய இடத்திலும் மசூதியை வேறிடத்திலும் கட்ட வேண்டும் என்று அதில்கோரப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராணுவத்தை நிறுத்தக் கோரியும், கோவில் கட்ட செதுக்கப்பட்டுள்ள தூண்களைக் கைப்பற்றக்கோரியும் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதில் ராணுவத்தை நிறுத்தக் கோரும் வழக்கு விசாரணை வரும் 13ம் தேதி நடக்கிறது. இந்த வழக்கில் தன்னையும்சேர்த்துக் கொள்ளக் கோரி ஐக்கிய வழக்கறிஞர்கள் முன்னணியின் தலைவர் அனீஸ் சுஹ்ராவர்த்தி மனு தாக்கல்செய்துள்ளார்.
அந்த மனுவில் அனீஸ் கூறியிருபபதாவது:
அயோத்தி விவகாரம் நாட்டின் ஒற்றுமையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. நாட்டின் மதசார்பின்மையும்பிரச்சனையில உள்ளது. வி.எச்.பி. மற்றும் பாபர் மசூதிக் கமிட்டி ஆகிய இரண்டின் நெருக்குதல்களுக்கும் அரசுபணிவதை நீதிமன்றம் தடுத்து நிறுத்த வேண்டும்.
இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒரே வழி ஒரே நேரத்தில் மசூதியையும் கோவிலையும் கட்டுவது தான். கோவிலைபிரச்சனைக்குரிய இடத்திலும் மசூதியை அருகில் வேறொரு இடத்திலும் கட்டலாம். ஆனால், இரண்டையும் ஒரேநேரத்தில் கட்ட வேண்டும். இது குறித்து விவாதித்த முன்னாள் நீதிபதிகள், இரு மதத் தலைவர்கள்,பத்திரிக்கையாளர்கள் கொண்ட குழுவை நீதிமன்றம் அமைக்கலாம் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கும் 13ம் தேதியே விசாரிக்கப்படும்.
அயோத்தியில் பாதுகாப்பு:
இந் நிலையில் அயோத்தியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அமல்படுத்தஅம் மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது.
பூமி பூஜைக்குத் தடை விதிக்கப்பட்டால் அங்கிருந்து வி.எச்.பியினரை வெளியேற்ற வசதியாக நூற்றுக்கணக்கானபஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே இங்கு பிற மாநிலலங்களைச் சேர்ந்த வி.எச்.பியினர் ரயில்கள் மூலம்உடனடியாகத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
வி.எச்.பியினரைத் தேடி கோவில்கள், விடுதிகள், ஆஸ்ரமங்களில் ரெய்டுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
ரயில்கள், லாரிகளில் மறைந்து வந்து திடீரென கோவில் கட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட வி.எச்.பியினர்முயலலாம் என்று தெரியவந்துள்ளதால் தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.
குதிரைகளில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சுற்றி வந்தவண்ணம் உள்ளனர். அருகாமையில் உள்ள 19மாவட்டங்களில் தாற்காலிக சிறைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன. 15ம் தேதி வன்முயிைல் ஈடுபடுபவர்களைப்பிடித்து இங்கு அடைக்கவும் திட்டிடப்பட்டுள்ளது.
இந்தமுறை மக்கள் ஆதரவு அவ்வளவாக இல்லாததால் பெருமளவில் பிரச்சனை இருக்காது என நம்புவதாகபோலீசார் தெரிவித்துள்ளனர்.
பதற்றப் பகுதியாக அறிவிக்கக் கோரிக்கை:
இந் நிலையில் அயோத்தியை பதற்றம் நிறைந்த பகுதியாக அறிவிக்க வேண்டும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கோரியுள்ளது.
இந்தக் கட்சியினர் தலைவர் பனாத்வாலா பிரதமர் வாஜ்பாய்க்கு எழுதியுள்ள கடிதத்தில்,
அந்த ஊரை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். மொத்த நாடே அயோத்தியாக மாறும் என வி.எச்.பி. மிரட்டிவருகிறது. இதனால் நாடு முழுவதும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மத்திய அரசின் ஆதரவு தான் இது போன்ற கும்பல்களுக்கு ஊக்கம் தந்து வருகிறது என்பதை இந்த நேரத்தில்சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications