பாளை. சிறையில் ஹைதர் அலி அடைப்பு
திருநெல்வேலி:
சிவகங்கையில் பிடிபட்ட அல்-உம்மா தீவிரவாதி ஹைதர் அலி பாளையங்கோட்டை மத்திய சிறையில்அடைக்கப்பட்டான்.
கடந்த 7ம் தேதி மதுரை அருகே திருமங்கலத்தில் வெடிகுண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும், ஹைதர் அலி,இமாம் அலி இருவரையும் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்தி சென்றது.
போலீசாரின் தீவிர வேட்டையில் சனிக்கிழமை மாலை சிவகங்கையில் ஹைதர் அலி கைதானான். கைதுசெய்யப்பட்ட ஹைதர் அலியை மதுரை போலீஸார், சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சிபிசிஐடிபோலீஸார் ஹைதர் அலியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை திருமங்கலம் மாஜிஸ்திரேட் வெங்கடாசலபதி முன்பு ஹைதர் அலிஆஜர்படுத்தப்பட்டான்.
ஹைதர் அலியை மார்ச் 21ம் தேதி வரை காவலில் வைக்குமாறும், அவனை பாளையங்கோட்டை மத்திய சிறையில்அடைக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
மார்ச் 22ம் தேதி மீண்டும் திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.இதையடுத்து ஹைதர் அலி பாளையங்கோட்டை அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
இதற்கிடையே, இமாம் அலியைத் தேடிப் பிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இமாம் அலிஇன்னும் மதுரைக்குள்தான் இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் இமாம் அலியின் உறவினர்கள் அதிகம் உள்ள கோமதிபுரத்திலும் போலீஸார் வீடு வீடாக புகுந்து சோதனைமேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
