தமாகா எம்.எல்.ஏக்களிடையே பிளவு: அதிமுகவை ஆதரிக்க கோரிக்கை
சென்னை:
அதிமுகவுக்கு ஆதரவு தர வேண்டும். காங்கிரஸ் கட்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் சேரக் கூடாது என்றுஅக்கட்சியின் முக்கியமான சில எம்.எல்.ஏக்கள் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூப்பனாரின் மறைவுக்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தடுமாறிக் கொண்டு வருகிறது. எப்போது அக்கட்சிகாங்கிரஸில் சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இணைவதற்கான அறிகுறியே காணவில்லை.
இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ராஜ்யசபா எம்.பி தேர்தலில் போட்டியிட முடிவுசெய்துள்ளார். அவர் வெற்றி பெற காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில், தமாகாவை விரைவில் இணைத்து விட வேண்டும் என்ற உறுதிமொழியின்படியே வாசனுக்கு,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளதாக பேசப்படுகிறது.
உறுதிமொழியை மீறினால் தமாகாவை உடைக்கும் முயற்சியை காங்கிரஸ் அதிரடியாக மேற்கொள்ளும் என்றும்மறைமுகமாக வாசனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் காங்கிரஸுடன் கட்சியை இணைக்கும்முடிவுக்கு வாசன் வந்திருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் தமாகாவைச் சேர்க்க அக்கட்சியின் முக்கிய எம்.எல்.ஏக்கள் எதிர்ப்புதெரிவித்துள்ளனர். மேலும் அதிமுகவை முழு மனதோடு ஆதரிக்க வேண்டும் என்றும் அவர்கள் விருப்பம்தெரிவித்துள்ளனர்.
தமாகாவின் அதிமுக விரோதப் போக்கு அர்த்தமற்றது என்று அவர்கள் பகிரங்கமாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சட்டசபை தமாகா தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் தலைமையில் நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மதுரைஎம்.எல்.ஏ. ஹக்கீம், குமரி மாவட்டம் கிள்ளியூர் எம்.எல்.ஏ. குமாரதாஸ் ஆகியோர் அதிமுகவை ஆதரிப்பதுமட்டுமே தமாகாவுக்கு நல்லது என்று பகிரங்கமாக கூறியுள்ளார்கள்.
ஆண்டிப்பட்டி தேர்தலிலேயே அதிமுகவை நாம் ஆதரித்திருக்க வேண்டும். ஆனால் தவறான முடிவை எடுத்துவிட்டோம் என்று அவர்கள் கோபமாக கூறியுள்ளனர்.
பிரச்சினைகளின் அடிப்படையில் அதிமுக வுக்கு ஆதரவு தரலாம் என்று எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியதற்கு,அதென்ன பிரச்சினைகளின் அடிப்படையில், அனைத்து விஷயங்களிலும் அதிமுக அரசுக்கு ஆதரவு தருவதில்என்ன தவறு என்று ஆவேசமாக அவர்கள் கேட்டுள்ளனர்.
அவர்களது கோரிக்கைக்கு மேலும் சில எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
எம்.எல்.ஏக்களின் விருப்பத்தை மீறி காங்கிரஸ் கட்சியுடன், தமாகாவை இணைத்தால் அது கட்சியில் பிளவைஏற்படுத்தலாம் என்று தெரிகிறது. பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் அதிமுக பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்றும்கூறப்படுகிறது.
எம்.பியாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஜி.கே.வாசன் இதை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை தமாகாமட்டுமல்லாது அனைத்துக் கட்சியினருமே ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications