ராஜ்ய சபா தேர்தல்: வாசன், சண்முகசுந்தரம் வேட்பு மனு தாக்கல்
சென்னை:
ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக தமாகா சார்பில் போட்டியிடும் அக்கட்சித் தலைவர் ஜி.கே. வாசனும்,திமுக சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரமும் இன்று (திங்கள்கிழமை) வேட்பு மனுக்களைத்தாக்கல் செய்தனர்.
வரும் 27ம் தேதி ராஜ்ய சபா தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்ய சபா எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
ஒரு இடத்திற்கு 34 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் கட்டாயம் தேவை என்னும் நிலையில், இவற்றில் 4 இடங்கள்கட்டாயம் அதிமுகவுக்கு உண்டு என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்று. மீதமுள்ளவற்றில் ஒன்று திமுகவுக்கும்மற்றொன்று தமாகாவுக்கும் சென்று சேர வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தமாகா சார்பில் அக்கட்சி வேட்பாளராக நேற்றைய தமாகா அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில்வாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி அவர் இன்று தன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதேபோல் திமுக சார்பில் அக்கட்சியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான சண்முகசுந்தரமும் இன்று தன்னுடையவேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டசபை செயலாளரும் ராஜ்யசபா தேர்தல் அதிகாரியுமான வி. ராஜாராமன், இந்த இருவரின்வேட்புமனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு வரும் 14ம் தேதிதான் கடைசி நாள் என்னும் நிலையில், அதிமுக இன்னும்தன்னுடைய வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications