அயோத்தி: மதுரை ஆதீனத்தின் புதிய யோசனை
மதுரை:
அயோத்தியில் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட இடத்தில் ராமர் கோவிலையும் பாபர் மசூதியையும் கட்டுவதற்குதனித்தனியான இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு மதுரை ஆதீனம் இன்று(செவ்வாய்க்கிழமை) கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரதமர் வாஜ்பாய்க்கு மதுரை ஆதீனம் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
ஒரு காலத்தில் இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்தான். ஆனாலும் தற்போது இந்தியாவில் இருக்கும் அவர்களை நாம் நம்சகோதர-சகோதரிகளாகத்தான் கருதி அன்பு செலுத்த வேண்டும்.
அயோத்தியில் நடக்கவுள்ள பூமி பூஜை நிச்சயமான இந்தியாவில் உள்ள இந்துக்களையும் பாதிக்கும்;முஸ்லீம்களையும் பாதிக்கும்.
ஆனால் அனைவரும் இந்தியர்கள்தானே. எனவே பூமி பூஜை ஒத்திவைப்பதற்கு எவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கமுடியுமோ, அத்தனையையும் செயல்படுத்த வேண்டும்.
மேலும் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட இடத்தில் தனித்தனியாக 2 இடங்களை ஒதுக்கி, ஒரு இடத்தில் பாபர் மசூதியையும்மற்றொன்றில் ராமர் கோவிலையும் கட்டுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
இவற்றின் கட்டுமானத்திற்காக ஆகும் செலவை முஸ்லீம்கள் சட்ட வாரியம், இந்து அமைப்புகள் மற்றும் மத்தியஅரசு ஆகியவை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
சர்ச்சைக்குரிய நிலத்தை பொது இடமாகவும் அறிவித்து உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஆதீனம் அக்கடிதத்தில்கூறியுள்ளார்.
இந்தக் கடிதத்தில் நகல்களை ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.பி. பரூச்சாமற்றும் சில காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும் மதுரை ஆதீனம் அனுப்பியுள்ளார்.
சங்கராச்சாரியாரை சந்தித்தார் ஜெத்மலானி:
இதற்கிடையே நேற்றிரவு திடீரென்று காஞ்சிபுரத்திற்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி,ஸ்ரீஜெயேந்திர சுவாமிகளைச் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
ஆனால் அயோத்தி பிரச்சனை குறித்து ஜெத்மலானி தன்னிடம் எதுவும் பேசவில்லை என்றும் வேறு சிலவிஷயங்களைப் பற்றித்தான் பேசினார் என்றும் ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications