அல் உம்மா கைதிகள் தப்ப உதவியவன் கைது: பரபரப்பான தகவல்கள்
மதுரை:
2 அல் உம்மா தீவிரவாதிகள் தப்பிய சம்பவத்தில் முக்கியமான நபர் ஒருவரை மதுரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
மேலூர் அருகே உள்ள சந்தைப்பேட்டை என்ற பகுதியைச் சேர்ந்த ஜஹபர் சாதிக் அலிதான் கைது செய்யப்பட்டநபர். இவன் ஒரு ஐடிஐ மாணவன்.
சாதிக் அலி கைது குறித்து மதுரை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆயுஷ் திவா கூறுகையில்,
சாதிக் அலியை உள்ளடக்கிய 11 பேர் கொண்ட கும்பல்தான் 2 அல் உம்மா தீவிரவாதிகளையும் கடத்தியது.கடத்தலுக்கான திட்டமிட்டது முதல் அதை அமலாக்கியது வரை சாதிக் அலி முக்கியப் பங்கு வகித்துள்ளான். இந்தக்கும்பல் செருப்புக்கடை சையத் என்பவன் தலைமையில்தான் இயங்கியுள்ளது.
இவர்கள் முதலில் துவரங்குறிச்சி பகுதியிலேயே ஹைதர் அலியையும், இமாம் அலியையும் மீட்கதிட்டமிட்டிருந்தனர். இதற்காக துவரங்குறிச்சி பகுதியில் டாடா சுமோ காருடன் காத்திருந்தனர்.
ஆனால் கைதிகளை ஏற்றி வந்த போலீஸ் வேன் துவரங்குறிச்சியில் நிற்கவில்லை. மாறாக நேராக மதுரைகோர்ட்டுக்குச் சென்று விட்டது.
இதையடுத்து மதுரை அண்ணா நகர் போலீஸ் நிலையம் அருகே கைதிகளை மீட்க இக்கும்பல் திட்டமிட்டது.ஆனால் அண்ணா நகர் போலீஸ் நிலையத்திலும் போலீஸ் வேன் நிற்கவில்லை. நேராக கோவில்பட்டி செல்லபோலீசார் திட்டமிட்டதால் வேன் அங்கு நிற்கவில்லை.
கோவில் பட்டி செல்லும் வழியில் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் மதிய உணவுக்காக போலீசார் நின்றபோதுஅங்கு வைத்து தீவிரவாதிகளைக் கடத்த கும்பல் முடிவு செய்தது. திட்டமிட்டவாறே 2 பேரையும் மீட்டுக் கொண்டுபறந்துவிட்டனர்.
இந்த சம்பவத்தின்போது மாங்கா பஷீர் என்பவன் தனது கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியைப்பயன்படுத்தியபோது அவனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது அவன் மதுரை நகரில் ஏதாவது ஒரு மருத்துவமனையில் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.எனவே அவனைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
தற்போது தலைமறைவாக உள்ள இமாம் அலி மேலூர் அல்லது மதுரையில் இருக்க வேண்டும் என்றும் போலீசார்உறுதியாக சந்தேகிக்கிறார்கள். எனவே இரு இடங்களிலும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட ஜஹபர் கொடுத்த தகவலின்பேரில் மதுரை வண்டியூரில் ஒரு வீட்டில் சோதனைநடத்தப்பட்டது. அங்கு பின் லேடன் படங்கள் ஏராளமான அளவில் பறிமுதல் செய்யப்பட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications