காணாமல் போன மாஜி எம்.எல்.ஏ.: சட்டசபையில் ஜெ. விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காணாமல் போன முன்னாள் திமுக எம்.எல்.ஏவான எம்.கே. பாலனை போலீசார் தேடிக் கொண்டுதான்இருக்கின்றனர் என்று சட்டசபையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
காணாமல் போன முன்னாள் எம்.எல்.ஏ., கண்ணகி சிலை மற்றும் வண்டலூர் பூங்கா சிறுத்தை ஆகியவை குறித்தகேள்விகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்கையில்,
பாலனைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் காவல்துறை மந்தமாகஇருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் கூறுவது சரியல்ல.
கண்ணகி சிலை பத்திரமாக மியூசியத்தில் உள்ளது. நீதிமன்ற உத்தரவுக்காக அரசு காத்துக் கொண்டிருக்கிறது. அதன்பிறகு சிலையை எங்கு நிறுவுவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
வண்டலூர் பூங்காவிலிருந்து காணாமல் போன சிறுத்தை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்றார்ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications