பூமி பூஜையை எதிர்த்து முஸ்லிம் சட்ட வாரியம் வழக்கு
டெல்லி:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நாளை (புதன்கிழமை)வழக்கு தொடரப் போவதாக முஸ்லிம் சட்ட வாரியம் அறிவித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக, இரு தரப்பினரிடையேயும் சங்கராச்சாரியார் நடத்தியபேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி மார்ச் 15ல் அயோத்தியில் பூமி பூஜை நடந்தே தீரும் என்று விஸ்வ ஹிந்துபரிஷத் அமைப்பு அறிவித்துள்ளது. ஆனால் பூமி பூஜை நடத்த மாட்டோம் என்று ராம ஜென்ம பூமிஅறிவித்துள்ளது. இதனால் இந்த அமைப்புகளுக்குளேயே மோதல் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் அயோத்தியில் பூமி பூஜை நடத்தப்படுவதை எதிர்த்து முஸ்லிம் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில்வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இலியாஸ் கூறியதாவது:
அயோத்தியில் அரசு கையகப்படுத்தி உள்ள நிலத்தில் வருகிற 15ம் தேதி பூமி பூஜை நடத்தப் போவதாக விஸ்வஹிந்து பரிஷத் அறிவித்து வருகிறது.
எனவே பூமி பூஜைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என்றுஇலியாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications