பெரம்பலூர்: கொலை வழக்கில் 9 பேருக்கு 56 ஆண்டு சிறை
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே 4 பேரை ஓட ஓட விரட்டி கொலை செய்த வழக்கில், 9 பேருக்கு தலா 56 ஆண்டு சிறைதண்டனை விதித்து பெரம்பலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது குடும்பத்துக்கும்,அதே ஊரில் உள்ள மாணிக்கம் என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
கடந்த 98ம் ஆண்டு ஜூலை மாதம் அதிகாலை பரமசிவம், இவரது மனைவி சாராதாம்பாள், மகன்கள் செல்வராஜ்,அண்ணாதுரை ஆகிய 4 பேரையும் ஓட ஓட விரட்டி நடுத்தெருவில் வெட்டி கொலை செய்த மாணிக்கமும், அவரதுஉறவினர்களும்.
இது தொடர்பாக மாணிக்கம், இவரது மகன்கள் பழனிச்சாமி, முருகானந்தம், சுருளிராஜ், உறவினர்கள்கோவிந்தராஜ், பஞ்சாட்சரம், ரவிச்சந்திரன், நாகராஜ், அன்பழகன் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதிசண்முகம் விசாரித்தார்.
குற்றவாளிகள் 9 பேருக்கும், தலா 4 ஆயுள் தண்டனை (56 ஆண்டுகள்) விதித்தார். இது தவிர தலா ரூ.10,000அபராதமும், அபராதம் கட்ட தவறினால் தலா 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications