தினகரன் திவால் ஆனவரா? - அமலாக்கப் பிரிவு வழக்கு
சென்னை:
பெரியகுளம் எம்.பியான டி.டி.வி. தினகரனை திவால் ஆனவர் என்று அறிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கஅனுமதி கோரி அமலாக்கப் பிரிவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் சுப்ரமணியம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
அன்னியச் செலவாணி மோசடி தொடர்பாக தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தொகையை செலுத்தத் தவறியதை தொடர்ந்து அவருக்கு திவால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்தமனுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து தரும்படி கூறி, அம்மனுவை அவரிடமே நீதிமன்றம் திருப்பிக்கொடுத்தது.
மனுவில் உள்ள குறைபாடுகளை நீக்கி, புதிதாக தினகரன் எந்த மனுவையும் இதுவரை தாக்கல் செய்யவில்லை.திவால் நடவடிக்கை எடுப்பதில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றே தினகரன் காலதாமதம் செய்து வருகிறார்.
எனவே திவால் நோட்டீஸை ரத்து செய்யக் கோரி தினகரன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.அவரை திவால் ஆனவர் என்று அறிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கப் பிரிவினருக்கு அனுமதிஅளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி பாலசுப்ரமணியம், மனு மீதான விசாரணையை வரும் அடுத்த திங்கள்கிழமைக்குதள்ளி வைத்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications