பூமி பூஜை: இந்து அமைப்புகளிடையே மோதல்
லக்னோ:
அயோத்தியில் வரும் 15ம் தேதி பூமி பூஜை நடைபெறும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) அறிவித்துள்ளநிலையில் அந்த பூஜை நடக்காது என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை பல்டி அடித்துள்ளது.
அயோத்தியில் பூமி பூஜை மட்டும் நடைபெறும் என்று கூறிய வி.எச்.பி., ஆனால் கோவில் கட்ட மாட்டோம் என்றுஅறிவித்தது.
இதனால் அதிர்ந்து போன ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவர் ராமச்சந்திர பரமஹன்ஸ், கோவில் கட்டமாட்டோம் என்று சொல்வதற்கு வி.எச்.பிக்கு அதிகாரம் இல்லை என்று கோபத்துடன் கூறினார்.
இதைத் தொடர்ந்து இந்த இரு அமைப்புகளும் "ஏறுக்கு மாறாக" தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க ஆரம்பித்தனர்.இதனால் பூமி பூஜை நடத்துவது தொடர்பாக இரு அமைப்பினரும் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டுவருகின்றனர்.
வரும் 15ம் தேதி பூமி பூஜை நடந்தே தீரும். கரசேவகர்களும் காசியைச் சேர்ந்த சாதுக்களும் இந்த பூஜையில் கலந்துகொள்வார்கள் என்று வி.எச்.பி. தலைவரான அசோக் சிங்கால் நேற்று (திங்கள்கிழமை) கூறினார்.
ஆனால் இவருடைய கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட தகவலை பரமஹன்ஸ் கூறியுள்ளார். ராமர் கோவில்கட்டுமானத்திற்குத் தேவையான தூண்களை வழங்கும் நிகழ்ச்சி மட்டும் அன்று நடைபெறும் என்றும் அதைத்தடுக்க யாராலும் முடியாது என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக ராமரே தன்னுடைய கனவில் தோன்றி உத்தரவிட்டதாகவும் பரமஹன்ஸ் கூறினார்.
மேலும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளவோ தடைகளை மீறவோ தாங்கள் தயாராக இல்லை என்றும்பரமஹன்ஸ் தெரிவித்தார்.
வி.எச்.பி. அமைப்பினரும் ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைப்பினரும் இவ்வாறு மாறி மாறி முரண்பாடானகருத்துக்களைத் தெரிவித்து மோதிக் கொண்டிருப்பதால் பூமி பூஜை நடக்குமா என்ற சந்தேகம் தற்போதுஎழுந்துள்ளது.
இதற்கிடையே இன்று நடக்கும் வி.எச்.பி. கூட்டத்தின் முடிவில் அந்த அமைப்பு பூமி பூஜை நடத்துவது தொடர்பாகதன்னுடைய இறுதியான அறிவிப்பை வெளியிடும் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications