வெடிக்கிறது திமுக-பாஜக மோதல்
கோயம்புத்தூர்:
முக்கிய பிரச்சினைகளில் பாஜகவுடன் கலந்தாலோசிக்க திமுக தலைமைக்கு விருப்பம் இல்லை என்று தமிழக பாஜகதலைவர் கிருபாநிதி புகார் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. அப்போது ஆளுநர் உரைவாசிக்கத் தொடங்கியதும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். அவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள்உறுப்பினர் திருமாவளவனும் வெளிநடப்பில் கலந்து கொண்டார்.
ஆனால் கூட்டணிக் கட்சியான பாஜக இந்த வெளிநடப்பில் கலந்து கொள்ளவில்லை. இது தமிழக அரசியலில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கோவை வந்த பா.ஜ.க. தலைவர் கிருபாநிதியிடம் கேட்கப்பட்டபோது அவர் கூறியதாவது,
வெளிநடப்புச் செய்வதற்கு முன் தேசிய ஜனநாயகக் கட்சித் தலைவர்களுடன் திமுக ஆலோசித்திருக்க வேண்டும்.ஆனால் அப்படி அவர்கள் செய்யவில்லை. திடீரென்று அவர்கள் வெளிநடப்புச் செய்தார்கள்.
எதற்காக வெளிநடப்புச் செய்கிறோம் என்பதை திமுகவினர் எங்களிடம் விளக்கியிருந்தால் அதை நாங்கள்பரிசீலித்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.
இதுமட்டுமல்லாமல், முக்கியப் பிரச்சினைகள் எதிலுமே எங்களுடன் திமுகவினர் ஆலோசனை செய்வதில்லை.எங்களிடம் ஆலோசனை நடத்துவதிலும் திமுகவுக்கு விருப்பமில்லை என்று உணர்கிறோம்.
இப்படி பலமுறை நடந்திருப்பதால், தமிழகத்தில் சுயேச்சையாக செயல்பட முடியுமா என்று கட்சி மேலிடத்தில்கேட்கவுள்ளோம். இருப்பினும் இது திமுகவுடனான கூட்டணிக்கு எந்தவித பாதகத்தையும் ஏற்படுத்தாது என்றுகிருபாநிதி கூறினார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications