கலவர பயம்: அயோத்தியை காலி செய்யும் முஸ்லீம்கள்
அயோத்தி:
அயோத்தியில் பதற்றம் அதிகரித்து வருவதால், வன்முறைக்குப் பயந்து அங்கு வாழும் முஸ்லீம்கள் அந்நகரைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
ராமர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜைக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விஸ்வ ஹிந்துபரிஷத் மற்றும் ராமஜென்ம பூமி அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் மேற்கொண்டுள்ளன.
பூமி பூஜை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதிக்கப் போவதில்லை என்று பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ளபோதிலும், வரும் 15ம் தேதி பூஜை கட்டாயம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அயோத்தியில் பதற்றம் அதிகரித்து வருவதால் 3,200 மத்திய ரிசர்வ் போலீசார் உள்பட 5,000க்கும்மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பூமி பூஜை தேதி நெருங்க நெருங்க அங்கு வன்முறை ஏற்படுமோ என்கிற பீதியில், அயோத்தியில் வாழும்முஸ்லீம்கள், தங்களுடைய வீடுகளைப் பூட்டி விட்டு அந்நகரை விட்டே வெளியேற ஆரம்பித்துள்ளனர்.
அயோத்தியின் மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர்தான் முஸ்லீம்கள். இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டால்தங்கள் உயிருக்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை என்பதால் அவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
ஏராளமான முஸ்லீம் பெண்களும் குழந்தைகளும் ஏற்கனவே அயோத்தியைக் காலி செய்து விட்டனர்.
கடந்த 1992 டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதிலிருந்து ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் 18முஸ்லீம்கள் கொல்லப்பட்டுள்ளனர். 425 முஸ்லீம் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications