தீண்டத்தகாதவரல்ல ஜெ.: வெங்கையா நாயுடு
சென்னை:
மத்திய அமைச்சர்கள் சென்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்காமல் இருப்பதற்கு அவர் ஒன்றும்தீண்டத்தகாதவர் அல்ல என்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று(செவ்வாய்க்கிழமை) கூறினார்.
வசுந்தரா ராஜே சிந்தியா உள்ளிட்ட சில மத்திய அமைச்சர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்திருப்பதால், விரைவில்பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேரப் போகிறதா என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு சென்னையில் வெங்கையாநாயுடு கூறியதாவது:
அரசு பிரச்சனைகள் தொடர்பாகத்தான் சில அமைச்சர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்தனர்.
அப்படியே எந்தப் பிரச்சனையும் இல்லாவிட்டாலும், ஜெயலலிதாவைச் சந்திப்பதில் என்ன தவறு உள்ளது? அவர்என்ன தீண்டத்தகாதவரா? அல்லது அவரைச் சந்திப்பது ஒரு பாவமான செயலா?
சில அமைச்சர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்ததால் மட்டுமே பாஜக கூட்டணியில் அதிமுக இணையப் போவதாகக்கற்பனை செய்து கொள்ளக் கூடாது.
திமுகவுடனான கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. எங்கள் உறவு சுமூகமாகவே இருக்கிறது. நடைபெற இருக்கும்இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை எங்கள் கட்சி ஆதரிக்கும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதிக்காது.புதன்கிழமை உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் அயோத்தியில் பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
அயோத்தி விவகாரம், குஜராத் வன்முறை சம்பவங்களை கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் தேவையில்லாமல்பெரிது படுத்தி வருகின்றன.
குஜராத் சம்பவம் தொடர்பாக அத்வானியும், குஜராத் முதல்வரும் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் கூறிவருகின்றன. இந்த பிரச்சனைக்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் கோருவதற்கு எந்த வித தார்மீகஉரிமையும் இல்லை என்று வெங்கையா நாயுடு கூறினார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications