சிவகங்கை ராணி மீது நில மோசடி வழக்கு
சிவகங்கை:
சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார் அரசு நிலத்தை விற்றதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலராக இருந்து வருகிறார் ராணி மதுராந்தகிநாச்சியார்.
சிவகங்கையில் உள்ள அரசு மன்னர் கல்லூரி எதிரே உள்ள நிலத்தை மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்குரூ.45 லட்சத்திற்கு நாச்சியார் விற்றுள்ளார். அதற்குரிய முன்பணமாக ரூ.11 லட்சத்தையும் அவர் பெற்றுள்ளார்.
இதே நிலத்தை மேலூரைச் சேர்ந்த ஒருவருக்கும் நாச்சியார் விற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தெரிய வந்ததும் முதலில் முன்பணம் கொடுத்த தொழிலதிபர் மதுரை குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார்கொடுத்துள்ளார். இந்த விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று மதுரை கோர்ட்டிலும் அவர் மனுத்தாக்கல்செய்திருந்தார்.
இதையடுத்து விசாரணையை விரைவுபடுத்துமாறு குற்றப் பிரிவு போலீசாருக்கு மதுரை குற்றவியல் நீதிமன்றம்உத்தரவிட்டது. குற்றப் பிரிவு போலீசாரும் உடனடியாகச் செயல்பட்டு, ராணி மதுராந்தகி நாச்சியார் மீது நில மோசடிவழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் துவக்கியுள்ளனர்.
இதில் ராணி விற்ற நிலம் அரசுக்குச் சொந்தமானது என்று தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நிலம் அரசுக்கல்லூரிக்குச் சொந்தமான நிலமாகும் என்றும் கடந்த 1984ம் ஆண்டு இந்த நிலத்தை அரசு கையகப்படுத்தியதாகவும்கூறப்படுகிறது.
இதுகுறித்து சிவகங்கை தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி, கல்லூரி முதல்வர் ஆகியோடம் போலீசார் விசாரணைநடத்தியுள்ளனர்.
இதற்கிடையே, இது பொய் வழக்கு என்றும் தன் பெயரைக் கெடுக்க சிலர் முயல்வதாகவும், ஆனால் இதைச்சந்திக்கத் தயார் என்றும் ராணி மதுராந்தகி நாச்சியார் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications