மொட்டையடித்து கொண்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

35 மாணவர்கள் மேல் உள்ள வழக்குகளை வாபஸ் பெற கோரி சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று(செவ்வாய்க்கிழமை) 2வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும், புரசைவாக்கத்தில் உள்ளஹோட்டல் ஊழியர்களுக்கும் தகராறு நடந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் சட்டக்கல்லூரி விடுதியில் நுழைந்து மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் பலமாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும் சட்டக்கல்லூரி மாணவர்களில் 35 பேரின் மேல் பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. இதனால்சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

இதனால் தமிழக அரசு அவர்களை சமாதானப்படுத்தி, மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ்பெறுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து, மாணவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

இந்நிலையில் இது வரை 35 மாணவர்கள் மீதான வழக்குகளை தமிழக அரசு வாபஸ் வாங்காததை கண்டித்துதிங்கள்கிழமை சட்டக்கல்லூரி விடுதி முன்பு 100க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் சாகும் வரைஉண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.

மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு 35 மாணவர்கள் மீதான வழக்குகளை உடனடியாக தமிழகஅரசு வாபஸ் வாங்க வேண்டும்.

ஹோட்டல் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகமாணவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இன்று மாணவர்களில் சிலர் உண்ணாவிரதம் இருக்கும் இடத்திலேயே மொட்டையடித்துக்கொண்டனர். தமிழக அரசு எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை எனில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்போம்என்று மாணவர்கள் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+