வாஜ்பாயைச் சந்தித்தார் உ.பி. ஆளுநர்
டெல்லி:
அயோத்தி விவகாரம் குறித்து பிரதமர் வாஜ்பாய் மற்றும் உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோருடன் உத்தரப்பிரதேச ஆளுநர் விஷ்ணு காந்த் சாஸ்திரி ஆலோசனை நடத்தினார்.
வரும் 15ம் தேதி அயோத்தியில் பூமி பூஜை நடத்தப்படும் என்று முதலில் கூறிய விஸ்வ ஹிந்து பரிஷத், நீதிமன்றத்தீர்ப்பு வரை காத்திருப்போம் என்று தற்போது சிறிது பின்வாங்கியுள்ளது.
இதற்கிடையே அயோத்தியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் திடீரென்று டெல்லி விரைந்த சாஸ்திரி,வாஜ்பாயைச் சந்தித்தார்.
அயோத்தியில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை குறித்து வாஜ்பாயிடம் சாஸ்திரி விளக்கமளித்தார்.
மேலும் அத்வானியையும் சந்தித்த சாஸ்திரி, அயோத்தி நிலவரம் குறித்தும் அங்குள்ள பாதுகாப்பு குறித்தும்அவரிடம் எடுத்துக் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய சாஸ்திரி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படிதான் பூமி பூஜை நடத்தப்படும் என்றுதெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு வாஜ்பாயை இப்போதுதான் அவர்சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பூமி பூஜை - நாளை முக்கிய விசாரணை:
இதற்கிடையே அயோத்தியில் வி.எச்.பியால் பூமி பூஜை நடத்த முடியுமா முடியாதா என்பது குறித்த மனு நாளைவிசாரணைக்கு வருகிறது.
இந்த விசாரணையை வி.எச்.பி. அமைப்பினர், வாஜ்பாய் ஆகியோர் மட்டுமல்லாமல் இந்திய மக்களே ஆவலுடன்எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை பூமி பூஜைக்கு அனுமதிக்கப் போவதில்லை என்று நேற்று வாஜ்பாய்அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அயோத்தி செல்ல அனுமதி கோரி மனு:
இந்நிலையில் அயோத்திக்கு சென்று வழிபடுவதற்கு அனுமதி வேண்டும் என்று கோரி ரவீந்தர் குப்தா என்ற ஒருதொழிலதிபரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தன்னையும் தன் குடும்பத்தினரையும் கடந்த 7ம் தேதி அயோத்திக்குள் செல்ல அனுமதிக்காததன் மூலம் அடிப்படைஉரிமைகளைத் தர உத்தரப் பிரதேச அரசு மறுத்துள்ளதுஎன்று தன் மனுவில் குப்தா கூறியுள்ளார்.
அயோத்தி முழுவதும் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதால், தன்னையும் தன் குடும்பத்தினரையும்அயோத்திக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் குப்தா கோரியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications