அயோத்தி: தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் - வி.எச்.பி.
அயோத்தி:
பூமி பூஜை நடத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் வரை காத்திருப்பதாக விஸ்வ ஹிந்து பரிஷத்(வி.எச்.பி.) அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் கூறினார்.
வரும் 15ம் தேதி அயோத்தியில் பூமி பூஜை நடத்தப்படும் என்று வி.எச்.பி. சமீபத்தில் அறிவித்தது. ஆனால், உச்சநீதிமன்றம் அனுமதிக்காத வரையில் அங்கு பூமி பூஜை நடத்த அரசு அனுமதிக்காது என்று பிரதமர் வாஜ்பாய்கூறிவிட்டார்.
இதற்கிடையே அயோத்தியில் பூமி பூஜை நடத்துவதை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக முஸ்லிம் சட்டவாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அசோக் சிங்கால் நிருபர்களிடம் கூறியதாவது:
பூமி பூஜை நடத்துவது குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்க தயார். எங்களுக்கு சாதகமாகத்தான்தீர்ப்பு இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
தீர்ப்பு சாதகமாக இல்லையென்றால், ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவர் ராமச்சந்திர பரமஹன்ஸ்தலைமையில் கோவில் கட்டுவதற்கான தூண்களை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடுவார்.
அப்படி தூண்களை எடுத்துச் செல்லும்போது எங்களைத் தடுத்து கைது செய்தால், சிறை செல்லவும் தயாராகஉள்ளோம்.
நாங்கள் அரசுடன் மோத விரும்பவில்லை. மார்ச் 15ம் தேதி கோவில் கட்டுவதற்கான ஏதாவது ஒரு பணி நடக்கவேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்.
அயோத்தியில் கரசேவகர்களை தடுத்து நிறுத்துவது மற்றும் அயோத்தியில் சில கட்டுப்பாடுகளை விதித்திருப்பதுதேவையில்லாத விபரீதங்களை தான் தரும்.
இந்த விஷயத்தில் பிரதமருக்கு உள்ள நெருக்கடி எனக்கு புரிகிறது. அயோத்தி பிரச்சனை தீர ஏதாவது ஒரு வழிபிறக்கும் என்று நான் நம்புகிறேன் என்று அசோக் சிங்கால் கூறினார்.
அகமதாபாத்தில் ஊரடங்கு நீக்கம்:
இதற்கிடையே அகமதாபாத்தில் ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த 15 நாட்களாக வன்முறையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்து, 300க்கும் மேற்பட்டஉயிர்களைப் பலிகொடுத்த அகமதாபாத், இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
சாலைகளில் மக்கள் இன்று சாதாரணமாக நடமாட ஆரம்பித்தனர். போக்குவரத்தும் வழக்கம்போல்நடைபெறுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications