4 தலித் கிராமங்களில் ஏப்ரலில் உள்ளாட்சி தேர்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நான்கு கிராமப் பஞ்சாயத்துகளுக்கு ஏப்ரல் மாதம் 2வது வாரத்தில் தேர்தல்நடைபெறும் என்று மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது, கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி,நாட்டாமங்கலம், கோட்டக்கச்சியேந்தல் ஆகிய நான்கு கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை.

தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்ட இந்த பஞ்சாயத்துக்களில் தலித் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் அவர்கள்விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்த பஞ்சாயத்துக்களை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினர்மிரட்டியதால் வேட்பாளர்கள் யாரும் நிற்கவில்லை.

இதைத் தொடர்ந்து இங்கு தேர்தல் நடத்த முடியவில்லை. கடந்த எட்டு ஆண்டுகளாகவே இந்த நிலை நீடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உடனடியாக நான்கு கிராமப் பஞ்சயாத்துகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று பல்வேறுகட்சியினரும் கோரி வந்தனர். இதையடுத்து, ஏப்ரல் 2வது வாரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

நான்கு கிராமப் பஞ்சாயத்துக்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி யாரும் இல்லாத காரணத்தால், இங்கு சிறப்புஅதிகாரிகளை அரசு நியமித்து, வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+