சென்னையில் இன்னொரு "செக்ஸ்" டாக்டர் கைது
சென்னை:
சென்னையில் இன்னொரு "செக்ஸ்" டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வக்கிர புத்தி மற்றும் வரதட்சணைகொடுமை குறித்து அவரது டாக்டர் மனைவியே போலீஸில் புகார் கொடுத்ததையடுத்து அந்த டாக்டர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் டாக்டர் ஜெகதீஸ்வர். இவரது மனைவி கலைவாணி. இவரும் ஒரு டாக்டர்.இவர்களுக்கு விஸ்வா மற்றும் அஸ்வத் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
வேலூரில் படித்த டாக்டர் ஜெகதீஸ்வர் சென்னையில் பல இடங்களில் கிளினிக் வைத்து நடத்தியுள்ளார். கடைசியாகராமாபுரம் பகுதியில் கிளினிக் வைத்திருந்தார்.
இந்நிலையில் டாக்டரின் கலைவாணி கடந்த திங்கள்கிழமை இரவு வளசரவாக்கம் காவல் நிலையத்திற்குஅழுதவாறு வந்தார். அவரது தலை கலைந்திருந்தது. கன்னம் வீங்கியிருந்தது.
காவல் நிலையத்திற்கு வந்த டாக்டர் கலைவாணி தனது கணவர் வரதட்சணை கேட்டுக்கொடுமைப்படுத்துவதாகவும், கொடுக்காவிட்டால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விடுவதாக மிரட்டுவதாகவும்அழுதவாறு கூறினார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் டாக்டர் ஜெகதீஸ்வரைக் கைது செய்தனர்.
ஜெகதீஸ்வர் குறித்து டாக்டர் கலைவாணி திடுக்கிடும் புகார்களைக் கூறியுள்ளார். அவர் கூறுகையில்,
எனது கணவர் செக்ஸ் வெறி பிடித்தவர். கிளினிக்கிற்கு வரும் ஒரு பெண்ணையும் விட மாட்டார். அவர்களுக்குஉடல்நலம் சரியாகி விட்டாலும் கூட மறுபடியும் கிளினிக்கிற்கு வரச் சொல்வார்.
தேவையே இல்லாமல் அவர்களது உடல்களைத் தொட்டுத் தொட்டுப் பேசுவார். அவரிடம் பல குடும்பப் பெண்கள்மானத்தை இழந்துள்ளனர். பலர் கற்பையும் இழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குர்ஷித் என்ற பெண்ணிடம், தான் ஒரு அநாதை என்று சொல்லி எங்களுக்குத்தெயாமலேயே திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் ஜெகதீஸ்வர் குறித்துத் தெரிய வந்ததும் அந்தப் பெண்அவரை விட்டுப் பிந்து சென்று விட்டார்.
பின்னர் ராமாபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஜெகதீஸ்வருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவரிடம் தனக்குத்திருமணம் ஆகவில்லை என்று கூறியுள்ளார்.
ஆபாச சிடிக்கள் பார்ப்பதை சமீபத்தில் வழக்கமாக்கிக் கொண்டார். வீட்டுக்கு அவற்றை எடுத்து வந்து என் முன்பேஅதைப் பார்ப்பார். அந்தப் படங்களில் வருபவை குறித்து அசிங்கமாக கமென்ட்டும் அடிப்பார்.
டிவி பார்க்கும் போது எந்தப் பெண் அதில் வந்தாலும் அவர்கள் குறித்து படு அசிங்கமாக கருத்துக் கூறுவார்.
இவற்றை என் குழந்தைகள் முன்பும் அவர் பேசியதால் நான் பொறுமையிழந்தேன். எனது குழந்தைகளுக்காகஅவரைப் பொறுத்துக் கொண்ட நான் இப்போது அவராலேயே எனது குழந்தைகள் வாழ்க்கை பாழாகி விடும் என்றுபயந்ததால் போலீஸில் புகார் கொடுத்தேன் என்று கூறினார் கலைவாணி.
சமீபத்தில்தான் செக்ஸ் டாக்டர் பிரகாஷ் பிடிபட்டு தமிழகத்தையே உலுக்கினார். இப்போது அதே ரகத்தில்இன்னொரு டாக்டர் பிடிபட்டுள்ளார். இவர் மூலம் என்னென்ன திடுக்கிடும் தகவல்கள் வரப் போகிறதோதெரியவில்லை.
கைதான டாக்டர் மீது வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியது, கொலை முயற்சி, மிரட்டல் ஆகிய பிரிவுகளில்வழக்குகள் போடப்பட்டுள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications