சென்னை-கொழும்பு விமானத்தில் ஹெராயின் பறிமுதல்: இலங்கை மூதாட்டி கைது
சென்னை:
இலங்கையைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி ரூ.1. 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளுடன் சென்னைவிமான நிலையத்தில் பிடிபட்டார்.
இலங்கையைச் சேர்ந்தவர் சுமனா. இவருக்கு வயது 62. நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னையிலிருந்து இலங்கைசெல்லும் விமானத்தில் ஏறினார்.
விமானம் கிளம்பும் நேரத்தில் விமான நிலைய போலீஸாருக்கு, சுமனா என்ற பெண் ஹெராயின் போதைப்பொருளைக் கடத்திச் செல்வதாகத் தகவல் வந்தது. இதையடுத்து விமான நிலைய போதைப் பொருள் தடுப்புஅதிகாரிகள் விமானத்தை கிளம்ப விடாமல் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் விமானத்திற்குள் தீவிர சோதனை நடத்தினர். சுமனாவைக் கண்டுபிடித்து அவரையும், அவர் வைத்திருந்தசூட்கேஸ்களையும் கீழே இறக்கினர். அப்போது போதைப் பொருள் கடத்துவதை சுமனா ஒத்துக் கொண்டார்.
ஆறு பீர் பாட்டில்களில் பாலிதீன் பைகளில் ஹெராயின் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இரண்டு ரெக்ஸின் சூட்கேஸ்களில் இந்த பீர் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து சுமனாவைபோலீஸார் கைது செய்தனர்.
இலங்கையைச் சேர்ந்த ஒருவர், அதுவும் வயதான பாட்டி ஒருவர், போதைப் பொருள் கடத்தியதாக கைதாவதுஇதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications