குமுளி அருகே தேவி கோவில் இடிப்பு: கேரள வனத்துறையினர் அட்டகாசம்
மதுரை:
கேரள எல்லையில் குமுளி அருகே உள்ள கண்ணகி கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள தேவி கோவிலை கேரளவனத்துறை அதிகாரிகள் திடீரென இடித்துத் தள்ளியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக, கேரள எல்லையில் குமுளி பகுதியில் உள்ள மங்களதேவி கண்ணகி கோவில். இந்தக் கோவில் எந்தமாநிலத்திற்கு சொந்தம் என்பதில் பிரச்சினை நிலவி வருகிறது.
கேரள காவல்துறையினர் இங்கு காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமிதினத்தன்று மட்டும் இங்கு தமிழக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மற்ற நாட்களில் இங்கு அவர்கள் வரமுடியாது.
கண்ணகி கோவில் அருகே தேவி கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு அருகே சில நாட்களுக்கு முன்பு தற்காலிககோவில் ஒன்று கட்டப்பட்டது. இங்கு அடுத்த வாரம் விழா நடைபெறவிருந்தது.
இந்த நிலையில் திடீரென கேரள மாநில வனத்துறை அதிகாரிகள் தேவி கோவிலை இடித்துத் தள்ளி விட்டனர்.மேலும் அந்த இடத்தில் இருந்த பந்தலுக்கும் தீவைத்துள்ளனர்.
கேரள அதிகாகளின் இந்த செயல் தமிழக பக்தர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால்தாங்கள் தீவைக்கவில்லை என்று கேரள அதிகாரிகள் தெவித்துள்ளனர்.
அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டதால் கோவில் மட்டும் இடிக்கப்பட்டது. ஆனால் தீவைத்தது யார்என்று தெரியவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
கேரளாவுக்கு எச்சரிக்கை:
தமிழக பக்தர்கள் கண்ணகி கோவிலுக்கு வரும்போதெல்லாம் அவர்களை கேரள போலீஸார் இழிவுபடுத்துவதோடு,நாய்களை விடவும் கீழாக நடத்தவது வாடிக்கையான சம்பவமாகி விட்டது.
இந்நிலையில் கோவில் என்று கூடப் பார்க்காமல் அதை இடித்துத் தள்ளியுள்ள செயல் தேனி மாவட்டத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள அதிகாரிகளின் இந்த செயல் தொடர்ந்து நீடித்தால் தமிழகத்திலிருந்து தேனி மாவட்டம் வழியாககேரளாவிற்கு செல்லும் உணவுப் பொருட்கள், காய்கறி லாரிகளை நிறுத்திப் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்என்று தேனி மாவட்ட கண்ணகி கோவில் பக்தர்கள் சபை எச்சரித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications