என்.எல்.சியை தனியாரிடம் தாரை வார்ப்பதா? - இளங்கோவன் கடும் எச்சரிக்கை
சென்னை:
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியைத் தடுப்பதற்காக பெரும் அளவில்போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் தாரை வார்க்க மத்திய அரசு மறைமுகமாக பல நடவடிக்கைகளைஎடுத்த வருகிறது. இது தொழிலாளர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.391 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இப்போது ரூ.4195 கோடி அளவுக்கு லாபம் ஈட்டித்தந்துள்ளது. இந்தியாவிலேயே நல்ல லாபத்துடன் இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனங்களிலேயே முக்கியமானதுஇது.
தனியார் மயமாக்கப்படலாம் என்ற மத்திய அரசு நிறுவனங்களின் பட்டியலில் நெய்வேலி நிறுவனம் இல்லை. இந்தநிலையில் நெய்வேலி நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைத்தால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கும். மின்சாரக்கட்டணமும் கடுமையாக அதிகரிக்கும்.
நெய்வேலி நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால்காங்கிரஸ் சார்பில் பெரும் அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அவ்வறிக்கையில் இளங்கோவன்கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications