ஜெ. உரையுடன் தமிழக சட்டசபை ஒத்திவைப்பு
சென்னை:
ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் உரையுடன் தமிழக சட்டசபை இன்று(வெள்ளிக்கிழமை) மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
சபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த சனிக்கிழமை (மார்ச் 9) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பின்னர்கடந்த திங்கள் முதல் இன்று வரை ஆளுநர் உரை மீதான விவாதங்கள் நடந்தன.
இதையடுத்து இன்று ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் உரையை ஜெயலலிதா வாசித்தார். அப்போது அவர்கூறியதாவது:
பல்வேறு அரசியல் காழ்ப்புணர்ச்சிகளையும் எனக்கு எதிராகப் போடப்பட்ட வழக்குகளையும் கண்டு நான் அஞ்சிஒதுங்கவோ கலங்கி விடவோ இல்லை.
ஆனால் இத்தனை சோதனைகளையும் நான் கடந்து வந்த பிறகு தமிழக மக்கள் என்னை மீண்டும் இந்த முதல்வர்நாற்காலியில் உட்கார வைத்து விட்டனர்.
தமிழக மக்களின் இந்த அன்புக்கும் ஆதரவுக்கும் நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன். என் மீது மக்கள் கொண்டுள்ளநம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக தமிழகத்தை நான் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாற்றிக்காட்டுவேன். அதுதான் என் வாழ்வின் நோக்கம் என்றார் ஜெயலலிதா.
இதையடுத்து சபையை ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை அவைத் தலைவரும் நிதியமைச்சருமான பொன்னையன்முன் மொழிய, மறு தேதி குறிப்பிடப்படாமல் தமிழக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
திமுக வெளிநடப்பு:
முன்னதாக அரசு போக்குவரத்து நிறுவனத்தின் சீரழிவிற்கு தான்தான் ஆதாரம் என்று ஜெயலலிதா கூறினாரேஎங்கே அது என்று கேட்டு முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.
முதல்வர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, அதை இடைமறிப்பது அநாகரிகமற்ற செயல் என்று கூறிபொன்முடியை இருக்கையில் அமருமாறு சபாநாயகர் காளிமுத்து கேட்டுக் கொண்டார். ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல் பொன்முடி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததார்.
இதையடுத்து அவருக்குப் பதிலளிக்கும் விதத்தில் பேசிய ஜெயலலிதா, திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகப்போக்குவரத்துக் கழகம் குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல பொன்முடியின் கையில் சிக்கிச்சின்னாபின்னமாகச் சீரழிந்து விட்டது என்று கூறினார்.
இதை வன்மையாக மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன், இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக்கூறினார். இதையடுத்து அன்பழகன் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையிலிருந்துவெளிநடப்பு செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications