கருணாநிதி-ரஜினி சந்திப்பு ஏன்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் திடீரென சமீபத்தில் சந்தித்தது ஏன் என்பதற்கு கருணாநிதிஇப்போது விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
அயோத்திப் பிரச்சினையால் ஏற்பட்ட கொந்தளிப்பை அடக்க காஞ்சி சங்கராச்சாரியார் தீவிர முயற்சிகளைமேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் மூத்த அரசியல் தலைவர் என்ற வகையில், சங்கராச்சாரியான் முயற்சி வெற்றி பெற வேண்டும்என்று கோரி அறிக்கை விட வேண்டும் என்று நண்பர் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார்.
இதற்காகத்தான் அவர் என்னை நேரில் சந்தித்தார். இதுகுறித்து இப்போதைக்கு வெளியே சொல்ல வேண்டாம்என்றும் கேட்டுக் கொண்டார்.
எனவேதான் அப்போது அதை சொல்லாமல் இப்போது சொல்கிறேன் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார்கருணாநிதி.












Click it and Unblock the Notifications