பாதியில் நிறுத்தப்பட்ட ஊர்வலம்: தூண்களை வழங்கினார் பரமஹம்ஸ்

Subscribe to Oneindia Tamil

அயோத்தி:

அயோத்தியில் திட்டமிட்டபடி நடந்த ஊர்வலத்தை பாதியிலேயே நிறுத்தி பூஜையைத் தொடங்கினார்ராமஜென்மபூமி அறக்கட்டளைத் தலைவர் ராமசந்திரதாஸ் பரமஹம்ஸ். இதன் பின்னர் அந்த இடத்திலேயேதூணையும் அதிகாரியிடம் தானம் செய்தார்.

கர்சேவக்புரம் என்ற இடத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தில் முதலில் பல போலீஸ் ஜீப்கள் சென்றன.அதைத் தொடர்ந்து ராமஜென்ம பூமி அறக்கட்டளைத் தலைவர் ராமச்சந்திர தாஸ் பரமஹம்சின் கார் சென்றது.

அதைத் தொடர்ந்து 2 தள்ளு வண்டிகளில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட 2 சிமெண்ட் தூண்கள் கொண்டுவரப்பட்டன.

இதைத் தொடர்ந்து விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களின் கார்கள் சென்றன.

ஊர்வலத்தில் முதலில் 500 பேர் தான் வந்தனர். தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்தது. ஊர்வலம் சென்ற பகுதிகளில்எல்லாம் பெரும் பதற்றம் நிலவியது.

இந்த ஊர்வலம் அரசு கையப்படுத்தியுள்ள நிலத்தையடுத்துள்ள ராம்கோட் என்ற இடத்தில் ஹனுமன்கடி பகுதியில்முடிவடைய இருந்தது. அங்கு தான் தூண்கள் தானம் வழங்கும் நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது.

ஆனால், தனது முகாம் அமைந்துள்ள திகாம்பர் அக்ரஹாரா என்ற இடத்தை ஊர்வலம் அடைந்தவுடன்ஊர்வலத்தை நிறுத்துமாறு ராமச்சந்திர தாஸ் உத்தரவிட்டார்.

இரு தூண்களையும் அங்கேயே இறக்கச் சொன்னார். அங்கு பூஜை நடத்திவிட்டு மீண்டும் கிளம்புவார் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பூஜையையும் தூண் தானம் வழங்கும் நிகழ்ச்சியையும் இந்த இடத்திலேயே நடத்திக்கொள்வதாக திடீரென அவர் அறிவித்தார்.

இந்த நிலம் அரசு கையகப்படுத்தியுள்ள நிலத்தில் இருந்து வெகு தூரத்தில் உள்ளது.

அதற்கு மேல் சென்றால் பெரும் வன்முறை வெடிக்கலாம் என்று உளவுப் பிரிவினர் எச்சரித்தனர். இயைடுத்துமத்திய உள்துறை அமைச்சர் அத்வானி ஊர்வலத்தில் இருந்த பரமஹம்சிடம் பேசினார். மாவட்ட மாஜிஸ்திரேட்டும்பரமஹம்சின் காரில் வழியில் ஏறி நிலைமையை விளக்கினார். இதையடுத்து கடுபபாகிப் போன பரமஹம்ஸ்கோபத்துடன் தான் ஊர்வலத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு தூண்களை ஒப்படைத்தார் என்று கூறப்படுகிறது.

ஊர்வலத்தை அவர் பாதியிலேயே நிறுத்திக் கொண்டது உடன் வந்த விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களுக்கே கூடஆச்சரியத்தைத் தந்தது. வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கல் தனது காரில் இருந்து இறங்கி பரமஹம்சின் கார் அருகேசென்று கேட்டார்.

அப்போது மத்திய அரசு மூலமாக வந்த நிர்பந்தத்தை விளக்கிய அவர் பூஜையை இங்கேயே நடத்திக்கொள்வதாகக் கூறினார்.

இதையடுத்து அதிகாரிகள் ஒரு புறம் மகிழ்ச்சியடைந்தாலும் ஹனுமன்கடி என்ற இடத்தில் ஏற்கனவே பூஜைக்கெனபாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

இதையடுத்து பெருமளவிலான போலீசார் திகம்பர் அக்ரஹாரத்துக்கு விரைந்து பாதுகாப்பை பலப்படுத்தினர்.

மத்திய அரசின் கண்காணிப்பாளர் சத்ருகன் சிங் அங்கு விரைந்தார்.

ஆனால், தூண்களை வாங்கிக் கொள்ள இருந்த மாவட்ட கலெக்டரும் அயோத்தி நில கண்காணிப்பாளருமானஏ.கே. குப்தா அங்கு வரவில்லை. இவரிடம் தூண்களைத் தர மாட்டேன் என பரமஹம்ஸ் கூறியதால் தான் சத்ருகன்சிறப்பு விமானத்தில் அங்கு அனுப்பப்பட்டார். ஆனால், கடைசியில் குப்தாவிடமே தூண்களை வழங்குமாறு மத்தியஅரசு கூறியது. இதை பரமஹம்ஸ் ஏற்றுக் கொணடர்.

ஆனால், குப்தா வரவில்லை. இதையடுத்து மத்திய அரசின் கண்காணிப்பாளர் சத்ருகன் சிங்கிடம் மாலை 3.30மணிக்கு முதல் தூணை பரமஹம்ஸ் வழங்கினார். இரண்டாவது தூணையும் பிற அதிகாரிகளிடம் வழங்கினார்.

தன்னை கடைசி நேரத்தில் நெருக்கி பூஜை நடக்கும் இடத்தை மத்திய அரசு மாற்றியதால் பா.ஜ.க மீது அவர்கடுப்பாகிவிட்டதாகத் தெரிகிறது. யாரிடமும் பேசாமல் கோபத்துடன் பூஜையை நடத்தி முடித்த அவர் உடனடியாகஅங்கிருந்து வெளியேறிவிட்டார். நிருபர்கள் கேள்வி கேட்டபோது கூட பதில் கூறாமல் போய்விட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+