அயோத்தியில் ஊர்வலம் தொடங்கியது.
அயோத்தி:
அயோத்தியில் பிரச்சனைக்குறிய இடத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள ராம்கோட் என்ற பகுதியில் உள்ளஹனுமான்கடி என்ற இடத்தில் சிறப்புப் பூஜை நடக்கவுள்ளது.
கோவில் கட்டுவதற்காக தூண்கள் செய்யும் பணி நடந்து வரும் கர்சேவக்புரத்தில் இருந்து விஸ்வ ஹிந்து பரிஷத்தலைவர் அசோக் சிங்கல் தலைமையில் 500 கர சேவகர்களும், ராமஜென்ம பூமி அறக்கட்டளைத் தலைவர்ராமச்சந்திர பரமஹம்சும் ஊர்வலமாகப் புறப்பட்டனர்.
ஊர்வலம் திட்டமிட்ட நேரத்தைவிட தாமதமாகப் புறப்பட்டது.
கோவில் கட்டும் பொருள்கள், தூண்கள் ஆகியவையும் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படுகின்றன.
தலைவர்கள் இருவரும் கார்களில் சென்றனர். 500 பேருக்கு 2,500 போலீசார் பாதுகாப்பாகச் சென்றனர்.பரமஹம்சின் காரைச் சுற்றி காவல்துறை உயர் அதிகாரிகளும், கமாண்டோக்களும் நடந்து வந்தனர்.
ஊர்வலம் நின்று நின்று மிக மெதுவாகப் போய்க் கொண்டுள்ளது.
அங்கு மாலை வரை பூஜை நடக்கும். தூண் தானம் செய்யும் நிகழ்ச்சியும் நடக்கும்.
இந்த நிகழ்ச்சியில் இந்த 500 பேர் தவிர வேறு யாரும் பங்கேற்க அனுமதி தரப்படமாட்டாது என்று போலீசார்தெரிவித்துவிட்டனர்.
ஹனுமன்கடியில் கோவிலுக்கான பைசாபாத் மாவட்ட ஆட்சியரும் அயோத்தி நில கண்காணிப்பு அதிகாரியுமானஆர்.கே. குப்தா பெற்றுக் கொள்வார். அப்போது மத்திய கேபினட் செக்ரட்டரியேட் அதிகாரி சத்ருகன சிங்பார்வையாளராக உடன் இருப்பார்.
முன்னதாக குப்தாவிடம் தூணைத் தர மாட்டேன், மத்திய அரசு அதிகாரி வந்தால் தான் தருவேன் என்று பரமஹம்ஸ்பிடிவாதம் பிடித்ததால் அவரை மத்திய அரசு சிறப்பு விமானத்தில் அனுப்பி வைத்தது. அவர் இந்த பூஜை,ஊர்வலம், தூண் வழங்கும் நிகழ்ச்சியை நேரில் கண்காணித்து வருகிறார். ஆனால், தூணை அவர் வாங்க மாட்டார்என்று மத்திய அரசு இப்போது தெரிவித்துவிட்டது.
குப்தா தான் இந்த பிரச்சனைக்குறிய நிலத்துக்கு பொறுப்பு அதிகாரி என்பதால் அவரிடம் தான் தூணைத் தரவேண்டும் என மத்திய அரசு கூறிவிட்டது.
உள்துறை அமைச்சர் அத்வானி இன்றும் இருமுறை தொலைபேசியில் பரமஹம்சிடம் பேசினார்.
கரசேவகர்கள் விடுதலை:
இந் நிலையில் காலையில் அயோத்தியில் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்ட 250 கர சேவகர்களும் பகல் 2மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்களை அயோத்திக்கு வெளியே ஓரிடத்தில் போலீசார் கொண்டு போய் இறக்கிவிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications